உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

399

விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கூலியும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வயதின் அடிப்படையில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்காகத்தான்.

சரி, போதாது திரு. பழனிச்சாமிக்கு இன்னும் என்ன என்று கேட்பார். தெரியும். தெரிந்துதான் இவற்றைச் சொல்ல விரும்புகிறேன், இருக்கின்ற கஷ்டங்களுக்கிடையிலே.

கடந்த பருவகாலத்திலே பெருமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திலே கொண்டு அதற்கு ஒரு நிவாரணமாக இந்த ஆண்டுக்கான நிலவரி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இதனால் இந்த ஆண்டு இழப்பு 43 கோடியே 33 இலட்ச ரூபாய். (குறுக்கீடுகள்) இல்லை, இது தமிழ்நாடு முழுவதற்கும். இதனால் இழப்பு 43 கோடியே 33 இலட்ச ரூபாய். சில பேர் ஏமாந்து போய் வரி செலுத்தியிருக்கிறார்கள். அவர்கள் நிலைமை என்ன என்று அக்காள் திருமதி பொன்னம்மாள் கேட்கிறார்கள். ஏற்கெனவே இந்த ஆண்டுக்குரிய நில வரியைச் செலுத்தியவர்களுக்கு. அவர்கள் செலுத்திய தொகை பற்று வைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு அவர்கள் செலுத்த வேண்டிய ய நிலவரிக்காக ஈடு செய்யப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

ம்

இவற்றைத் தவிர கூட்டுறவு வங்கிக் கடன். எதிர்பார்க்க வேண்டாம். இயலாமையைச் யலாமையைச் சொல்லப் சொல்லப் போகிறேன். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்ற கடன்கள் மீதான இந்த ஆண்டுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை அரசும் பரிசீலித்தது. 1994-ஆம் ஆண்டு, கடந்த ஆட்சியிலே, மாநில அரசு ‘நபார்டு' வங்கியோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இத்தகைய வட்டியைத் தள்ளுபடி செய்ய வழியே இல்லை. அப்படி 1994ல் ஒப்பந்தம் பண்ணியிருக்கிறார்கள் 'நபார்டு' வங்கியோடு. அப்படி 'நபார்டு' வங்கியினுடைய ஒப்பந்தத்தினை மீறி வட்டியை நாம்