402
நிதிநிலை அறிக்கை மீது
உரை : 28
நாள் : 27.3.1999
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதிநிலை அறிக்கையை இந்த அவையிலே வழங்கியபோது, அவையிலே இருந்து அதைப் படித்து உணர்ந்து மகிழ்ந்த என்னுடைய அருமைத் தம்பி திரு. ஆல்பன் அவர்கள் அந்த நிதிநிலை அறிக்கைக்கு நான் பதில் அளிக்கின்ற நேரத்தில் இல்லையே என்கின்ற ஆழ்ந்த வேதனையோடு என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட, சரியாகச் சொல்ல வேண்டுமானால் 34 பேர், கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். சுமார் 8 அல்லது 9 மணி நேரத்திற்கு மேலாக கருத்துக்கள் வழங்கப்பட்டிருக் கின்றன. எத்தனையோ அலைகள், புயல்கள், இவற்றிற்கு இடையிலேகூட 34 பேர் இந்த வரவு-செலவுத் திட்டத்திலே தங்களுடைய வாகான கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற வாய்ப்புப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன்.
இந்த அறிக்கை குறித்து, உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மற்றும் மற்ற கட்சிகளினுடைய தலைவர்களும், உறுப்பினர்களும், பாராட்டியும், பாராட்டுக் களுக்கு இடையே குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அரசு ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அரிய கருத்துக்களை எடுத்துரைத்தும் கடமையினை ஆற்றியிருக்கிறார்கள். பல பாராட்டுக்களை இந்த நிதிநிலை அறிக்கையைப்பற்றி இங்கே தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஒரு சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, என்ன காரணத்தினாலோ இது கையாலாகாத சர்க்கார்; இது கையாலாகாதவர்கள் தயாரித்த பட்ஜெட்' என்பதைப் போன்ற ஒரு வார்த்தையைச்
து