434
நிதிநிலை அறிக்கை மீது
அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளுக்கு மானியம்
192.15 கோடி ரூபாய்.
மது
அரசு உதவி பெறும் தனியார் பல்தொழில் பயிற்சி பயிலகங்களுக்கு மானியம் 22.77 கோடி ரூபாய். மருந்துகளுக்காக ஒதுக்கீடு 115 கோடி ரூபாய்.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு 100
கோடி ரூபாய்.
கைத்தறித் துணிகளுக்குத் தள்ளுபடி மானியம் 72 கோடி ரூபாய்.
மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அனுமதி 80 கோடி ரூபாய்.
மாணவர்களுக்குச் சீருடைகள் 56 கோடி ரூபாய். மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் 25 கோடி ரூபாய்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டத்திற்கு 70 கோடி ரூபாய்.
முதியோர் உதவித் தொகை மற்றும் பிற ஓய்வூதியங்கள் 141 கோடி ரூபாய். இன்றைக்கு டில்லியிலே அறிவித்து இருக்கிறார்களே, முதியோர்களுக்கெல்லாம் 10 கிலோ அரிசி என்று; அதை ஏற்கெனவே தமிழ்நாட்டிலே நாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம்; அந்தத் திட்டத்திற்காக 141 கோடி ரூபாய்.
சிறார்களுக்கு, சத்துணவு சாப்பிடும் சிறார்களுக்கு, வாரம் ஒரு முட்டை வழங்குவதற்கு 35 கோடி ரூபாய்.
தொழில் மானியங்கள்
50.85 கோடி ரூபாய்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்திற்கு இழப்பீட்டு மானியம் அவர்கள் அதிக விலை கொள்முதலுக்கு கொடுக்க வேண்டுமென்பதால், அந்தப் போராட்டத்தைத் தடுக்க இழப்பீட்டு மானியம் தந்தது
15.00 கோடி ரூபாய்