36
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பத்திரிகைகள் மீதான உரிமைப் பிரச்சினை
உரை : 58
நாள் : 09.03.1979
கலைஞர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, இங்கே தரப்பட்டிருக்கின்ற உரிமைப் பிரச்சினை குறிப்பிட்ட இரண்டு மூன்று பத்திரிகைகளைப்பற்றியது, அதாவது முரசொலி, அலை ஓசை, தினகரன் ஆகிய ஏடுகளில் இங்கு எழுப்பப்பட்ட சிம்கோ மீட்டர்ஸ் தொடர்பான முழக்கங்கள் வெளிவந்துவிட்டன என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே தரப்பட்டுள்ளது. மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்கள், அன்றைய தினம் முழக்கங்களுக்கிடையே பேசியது தெளிவாகக் காதுகளில் விழவில்லை என்ற குறிப்பினை முரசொலி, அலை ஓசை, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலே மாத்திரமல்லாமல் தினமணி ஏடுகூட அந்தச் செய்தியை வெளியிடுகிற நேரத்தில் அதனுடைய இறுதிக் குறிப்பிலே துணைத்தலைவர் என்ன சொன்னார் என்பது காதிலே விழவில்லை என்று கோடிட்டு காட்டியிருக்கிறது.
அது மாத்திரமல்லாமல், அன்றைக்குப் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திரு. மாரிமுத்து அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதுகூட குழப்பத்திற்கிடையே யாருடைய காதிலும் விழவில்லை என்கிற அந்தக் குறிப்பும் இந்து, இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஏடுகளில்கூட வெளியிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல வெளியே மாண்புமிகு துணைத் தலைவரவர்கள் சில பத்திரிகை நிருபர்களை அழைத்துப் பேசியதைக் கண்டேன். குறிப்பிட்ட சில பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அவர்கள் எல்லா பத்திரிகை நிருபர்களையும் தன்னுடைய அறையிலே அழைத்து வைத்து இப்படி இப்படி நான் தீர்ப்புக் கூறினேன் என்று சொல்லியிருந்தால் அதற்கேற்ப பத்திரிகைகளிலே பிரசுரித்திருக்கக்கூடும். இதனை அரசாங்க செய்தித்துறை, இயக்குனர் அவர்களாவது செய்திருக்கலாம். எல்லா பத்திரிகை நிருபர்களையும் உடனடியாக அழைத்துச் சொல்லியிருக்கலாம். ஏனென்றால் செய்தித்துறை ரொம்ப