உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மெட்றாஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் லஞ்ச ஊழல் தாண்டவமாடிற்று என்ற காரணத்திற்காக சேர்மன் கைது செய்யப் பட்டார் (ஹவுஸ் அரெஸ்ட்); செக்ரடரி கைது செய்யப்பட்டார்; சூப்பரின்டென்டெண்டு கைது செய்யப்பட்டார். அவர்கள் கைது செய்யப்பட்டார்களே தவிர, இதுவரை அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்படவில்லை. காரணம் கேட்டால்

பேசுகிறது...

ஊர்

கனம் உதவி சபாநாயகர் : 'ஊர் பேசுகிறது' என்றெல்லாம் கனம் அங்கத்தினர் பேசவேண்டாம்.

கலைஞர் மு. கருணாநிதி : 'எங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டால் நாங்கள் சில அமைச்சர்களைக்கூட இதிலே காட்டிக்கொடுப்போம்' என்று அந்த குற்றவாளிகள் மிரட்டியதாக வதந்திகள் உலவுகின்றன. அமைச்சர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்ற களங்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகவாவது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா; அந்த வழக்கு பதிவு செய்யப்பட வேண்டாமா என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

சொந்தக்காரர் விஷயம், வேண்டியவர் விஷயங்கள் கூட்டுறவுச் சங்கங்களோடு, சர்வீஸ் கமிஷனோடு போய் விட்டதா என்றால் இல்லை. அதையும் கடந்து அமைச்சர்கள் நிலையில் வந்திருப்பதற்கான ஆதாரங்களையும் இந்த மன்றத்தில் எடுத்துவைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். பொதுத் துறை, தனியார் துறை இரண்டையும் இந்தச் சர்க்கார் தங்களுடைய பொருளாதாரத் துறையிலே இலக்கணமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலாளிகளிடமே ஏன் எல்லாவற்றையும் கொடுக்கிறீர்கள்; ஏன் அவற்றையெல்லாம் பொதுத்துறையிலே எடுத்துச் செய்யக்கூடாது என்று கேட்டார் அமைச்சர் வெங்கட்டராமன் அவர்கள். 'நம்மிடத்தில் அவ்வளவு பணம் இல்லை; தனியார் துறையினர் முதலீடு செய்ய முந்திக் கொண்டு வருகிறார்கள்; அதைப் பயன்படுத்தி நாம் அந்தத் தொழில்களை வளர்க்க வேண்டாமா? என்று கேட்கிறார். அவர்களைப் பொறுத்தவரையில் வாதம் நியாயம். ஆனால்