உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அவர்களிடம் பெரும் தொழில்களை எல்லாம் ஒப்படைக்கிறோம். சர்க்காரே எல்லாவற்றுக்கும் பணம் போடுவதென்றால் முடியக்கூடிய காரியமா என்று நமக்கு சர்க்கார் எடுத்துக் கூறுகின்றார்கள். இப்போது சர்க்கார் என்ன சொல்லுகிறது? இதில் சர்க்காருடைய பொருளாதாரக் கொள்கை சேதப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை சர்க்கார் ஆராய வேண்டும்.

மற்றொன்று, சென்னையில் சாக்கடைத்திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஐந்தாவது வட்டார (5-வது ஸோன்) சாக்கடைத் திட்டம் ஒன்றை அரசினர் அங்கீகாரம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசாங்கம் இதற்கான நிதியையும் மாநகராட்சிக்கு வழங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சாக்கடைத் திட்டம் போடுவதற்காக பைப்புளும் வாங்கி தரையில் போடப் பட்டிருக்கின்றன, இந்தச் சாக்கடைத் திட்டம் திருவான்மியூர் பக்கத்தில் நீலாங்கரை கிராமத்தில் இருக்கின்ற சுமார் 400 ஏக்கர் நிலத்தில் நிறைவேற்றவேண்டிய திட்டம். இந்த நிலத்தில் சாக்கடைத் தண்ணீரை சுத்தம் செய்து, பின்னால் அதை பக்கீம்காம் கால்வாயில் இணைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இந்த 400 ஏக்கர் நிலத்திற்குள் சாக்கடையை சுத்தப் படுத்தவேண்டும். இதை மதிப்பிற்குரிய அமைச்சர் மஜீத் அவர்களும், மதிப்பிற்குரிய ஜோதி அம்மையார் அவர்களும் போய் அங்கீகாரத்திற்காக பார்வையிட்டதாகவும் கேள்விப் பட்டேன். அப்படிப்பட்ட இடம் கடந்த மூன்று ஆண்டு காலமாக கார்ப்பரேஷனுக்கு கிடைக்காத காரணத்தால் இந்த ஐந்தாவது வட்டார சாக்கடைத் திட்டம் நிறைவேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த 400 ஏக்கர் நிலத்திற்கு 'ஆர்.வி. அவின்யூ' என்று பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது அமைச்சர் ஆர். வெங்கட்டராமன் அவர்களுடைய நிலம் என்று சொல்லப்படுகிறது! என்னால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலாவிட்டாலும், ஏன் 'ஆர்.வி. அவன்யூ' என்று போடப் பட்டிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அமைச்சர் அவர்களுடைய பெயரிடப்பட்டிருப்பதால் இத்திட்டம் நிறைவேறாமல் தாமதப்படுகிறதா என்கின்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் கார்ப்பரேஷன்