உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நிலவுடைமையாளர்கள், அதிகாரிகள் ஆகிய இந்த மூன்று தரப்பினரும் முத்தரப்பு மாநாடு என்ற பெயராலே கூடி சில முடிவுகளை எடுத்தார்கள். அந்த முடிவின்படி, பயிரிடும் பருவத் திலும், அறுவடைப் பருவத்திலும் கூலி விகிதங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மரக்கால் நெல்லும், ரூ.1.30 காசு பணமும் தரப்பட வேண்டுமென்றும், பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மரக்கால் நெல்லும், 37 காசும் தரப்பட வேண்டு மென்றும் கீழ்த் தஞ்சையில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டிலே முடிவு எடுக்கப்பட்டது.

1967 அக்டோபர் திங்கள் மன்னார்குடியில் விவசாயப் பிரச்சினை குறித்து எழுந்த சில நிலைமைகளுக்காக, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மீண்டும் ஒரு முத்தரப்பு மாநாட்டைக் கூட்டினார்கள். அதில், அறுவடை செய்த நெல்லில், கலம் ஒன்றுக்கு நெல் அறுவடை செய்வதற்கான கூலி, உள்ளூர் படியில் அரைப்படி அதிகரிக்கப்பட்டது. இவ்வாறாக 4 உள்ளூர் படியாக வழங்கப்பட்ட இடத்தில் 41/2 உள்ளூர் படியாக உயர்த்தப்பட்டது. 5 படி 51/2 படியாக உயர்த்தப்பட்டது. கலம் ஒன்றுக்கு 6 உள்ளூர் படியாகக் கொடுக்கப்பட்ட இடங்களில் அந்த அளவே நீடிக்கும், அதை அதிகரிப்பதாக இல்லை என்ற அளவிலே மன்னார்குடியில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டிலே 1967 அக்டோபர் திங்களிலே முடிவு எடுக்கப்பட்டது.

6

1968 ஜூன் திங்களில், அடுத்த பயிரிடும் பருவத்தில் மறுபடியும் சில கோரிக்கைகள் எழுதப்பட்டன. ஜூன் திங்கள் 1968-ம் ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கீழ்க்கண்டவாறு கூலி விகிதம் முடிவு செய்யப் பட்டது. ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் நெல், ஒரு ரூபாய் பணம்; பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் நெல், 25காசு பணம் வெளியிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சம்பந்தமாக உள்ளூர் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டுமென்றும், கீழ்ப்படியாத திறமையற்ற தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கப்பட வேண்டியதில்லை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கிழக்குத்