கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ய
95
தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார்களும், கோட்ட அதிகாரிகளும் அவர்களுடைய நாட்டத்திற்குக் கொண்டு வரப்படுகிற கூலித் தகராறுகளை அவ்வப்போது அமைதியோடு தீர்த்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டின் விளைவாக கிழக்குத் தஞ்சையில் 1968-ம் ஆண்டு குறுவைப் பயிர் சாகுபடி அமைதியாக முடிவுற்றது. அதே ஆண்டு அக்டோபர் திங்கள் 15-ம் நாளுக்குப் பிறகு நவம்பர் 20-ம் நாளுக்கு இடையே குறுவை அறுவடை செய்யப்பட்டபோது அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சில இடங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்றன. கிளர்ச்சிகள் நடைபெறக் காரணம்- ஏற்கனவே ஒத்துக்கொள்ளப் பட்ட மன்னார்குடி மாநாடு, திருவாரூர் மாநாட்டின் தீர்மானப்படி உள்ள கூலி உயர்வைத்தான் தரமுடியுமென்று மிராசுதாரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாகவும், இங்கே ஏற்கனவே தரப்பட்டது. 6 படிதான்- அதைத்தான் தரவேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும், இடையிலே ஏற்பட்ட சர்ச்சைகளின் காரணமாக பாதுகாப்பை முன்னிட்டு, சட்டம், அமைதி, ஒழுங்கு காப்பாற்றப்படவேண்டுமென்பதை முன்னிட்டு புதுச்சேரி, ஆதமங்கலம், கருவேலி ஆகிய இடங்களில் அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உடனடியாக இயங்கும் காவல்படைப் பிரிவினர் அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, அசம்பாவிதமான சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சிக்கல், வலிவலம், கீவளூர், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, ஆதமங்கலம் ஆகிய இடங்களில் படைக்கலன் தாங்கிய காவல் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
இவைகளுக்கிடையேதான் திடீரென்று கீழ்வெண்மணிச் சம்பவம் உருவாயிற்று. கீழ்வெண்மணிச் சம்பவம் கூலிப் பிரச்னையால் ஏற்பட்டதா, கம்யூனிஸ்டு நண்பர்கள் குறிப் பிட்டது போல் வர்க்கப்போராட்டத்தின் உணர்ச்சி வடிவமா, அல்லது அனைவரும் சேர்ந்து தீர்வுகாணவேண்டிய ஒரு பிரச்சினைக்கான அறிகுறி என்று திரு.ம.பொ.சி. அவர்கள் குறிப் பிட்டார்களே, அதுபோன்ற சம்பவமா என்பவைகளையெல்லாம் நாம் எண்ணிப்பார்த்திட வேண்டும். எந்த ஒரு அரசாங்கத்திலும், திடீர் திடீரென்று- இந்த மாமன்றத்திலே முதலமைச்சர் பேரறிஞர்