கலைஞரின் சட்டமன்ற உரைகள்
169
Dr. H.V.HANDE: These statistics do not cover the frequent and fantastic break-down of electricity all over the State, especially in the City of Madras. There is sudden loss of power, increase and decrease in voltage and it is all so bad and all this happens because of expansion and so in giving statistics, that also should be covered.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : செய்து வருகிற பெரிய காரியத்தில் இ ைடயில் ஏற்படுகிற குறைபாடுகள் குறித்துப் பேசுகின்றார்கள். அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் சுட்டிக்காட்டப்படுகிற நேரத்தில் அந்தக் குறைபாட்டைக் களைவதற்கு மின்வாரியம் தயாராய் இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பிச்சைக்காரர்களுடைய மறுவாழ்வுத் திட்டம் என்று தொடங்கியபோது அது சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் வேறு எந்த மாநில அரசும் அது பற்றி எண்ணிப்பார்க்காத நேரத்தில் முன்னேற்றக் கழக அரசு தான்- பிச்சைக்காரர்கள்தானே, அதுவும் தொழுநோய்ப்
பிச்சைக்காரர்கள்தானே என்று அலட்சியப்படுத்தாமல்-சமுதாயத் திற்கே அவக்கேடாக இருக்கிற அந்தப் பிரச்சினையில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறது. இன்றைக்கு பருகூர், பானூர், உளுந்தூர்ப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய நான்கு இடங்களில் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு தஞ்சை, கோவை, சேலம், தர்மபுரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டு மொத்தமுள்ள அந்தப் 10 இல்லங்களும் முடிந்தவுடன் 5 ஆயிரம் தொழுநோய்ப் பிச்சைக் காரர்கள் அங்கே மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இந்த முன்னேற்றக் கழக அரசுதான். இந்தத் திட்டத்தினுடைய வெற்றிக்குப் பிறகு மிச்சமுள்ள பிச்சைக்காரர்கள்-தொழுநோய் பாதிக்கப்படாமல் இருக்கிற பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பெறுகிற திட்டத்தையும் இந்த அரசு தீட்ட இருக்கிறது.
கண்ணொளி வழங்குகிற திட்டம் சிலரால் கேலி செய்யப்படலாம். சிலர் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிறது என்று கருதலாம். உண்மையாகச் சொன்னால் அதற்கு விளம்பரம் நிரம்பத்