204
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பொங்க
ரூபாய். ராஜமாணிக்கம் வீட்டில் சென்று அவர்கள் சோதனை நடத்தினார்கள். அங்கே ஆயிரம் ரூபாய் இருந்தது. எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஐந்து, ஆறு ஆயிரம் ரூபாய்க்கு நகைகள் இருந்தன. அந்த ராஜமாணிக்கம் அவர்கள் இன்று, நேற்றல்ல, பல ஆண்டுக் காலமாக கோயம்புத்தூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்து வருகின்றவர். இன்னும் சொல்லப்போனால் சிங்கநல்லூரில் 40 ரூபாய் வாடகைக்கு நான் ஒரு வீட்டில் குடியிருந்தபோது, அரிசிக்குக் கஷ்டப்படுகிற நேரத்தில், என்னுடைய நேரத்தில், என்னுடைய வீட்டிற்கு அரிசி கொண்டுவந்து, கொடுத்து, என்னுடைய வீட்டில் உலை வைக்கின்ற அளவுக்கு அன்றைய தினம் வசதிபடைத்திருந்தவர். ஒரு கடையில் குமாஸ்தாவாகப் பணியாற்றி சம்பாதித்தார். அவருக்கு அவருடைய கழகப் பணியை கௌரவிப்பதற்காக, கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தார் நிதி வசூல் செய்து, என்னை அழைத்து 40 ஆயிரம், 45 ஆயிரம் அண்மையில் கக்கன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்'-அதைப் போல, அன்றைக்கு ராஜமாணிக்கத்திற்கு 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு வீடு வாங்கித் தந்தோம். அந்த வீட்டிற்கு வாங்கிய பத்திரம் அவருடைய வீட்டில் இருந்திருக்கிறது. அதைப்பற்றி 'பஞ்சன் லாமாவோ', 'தலைலாமாவோ' அந்த 'பஞ்சன் லாமா' பத்திரத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நாற்பத்தேழு ஆயிரம் ரூபாய் பத்திரம், ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய இதையே கைப் பற்றவில்லை. கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
ஆக, இப்படி முன்னேற்றக் கழகத்திலே யார், யார், எங்கெங்கே தூண்களாக இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் மிரட்டுவது என்ற அளவுக்கு வருமானவரி இலாக்கா அவர்களுடைய கையிலிருக்கிறது என்கின்ற காரணத்தினாலும். என்ஃபோர்ஸ்மெண்ட் இலாகா தங்கள் கையில் இருக்கிறது என்ற காரணத்தினாலும் மிரட்டி, இன்றைக்குச் சில பேரைப் பணிய வைக்கலாம் என்று கருதியிருக்கிறார்கள். அவர்கள் தேடிப் பார்த்து, பணத்தைக் கைப்பற்ற வேண்டிய இடங்கள் தமிழகத்திலே ஏராளமாக இருக்கின்றன. அங்கேயெல்லாம் என்ன செய்கிறார்கள் தெரியுமா? சமரசம் பேசிக் கொள்கிறார்கள். கட்சியிலிருந்து வெளியே வருகிறாயா விட்டு விடுகிறோம். கட்சியை இரண்டாக ஆக்குகிறாயா, விட்டு விடுகிறோம் என்று சமரசப் பேச்சு. ஒரு நண்பருடைய