கலைஞரின் சட்டமன்ற உரைகள்
249
எதிர்க்கட்சிக்காரர்கள் கேட்பார்கள், ஒரு ஆளும் கட்சிக்கு விரோதமாக இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருவதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்வதுதானே முறை என்று. நியாயமான கேள்வி கேட்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. இந்த உணவுப் பிரச்சினையில் அப்போது இருந்த ஆளும் கட்சி சரியாக நடக்காத காரணத்தால் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்துப் போராடி இருக்கிறது. ஆனால் அந்தப் போராட்டம் திட்டமிட்டு யார், யார் எந்தெந்த இடத்தில் யார் யாருடைய தலைமையில் மறியல் செய்வது, கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால் அல்லது வேறு ஒரு அலுவலகத்திற்கு முன்னால் மறியல் செய்வது, இத்தனை மணிக்குச் சென்று மறியல் செய்வது, கைது செய்யப்பட்டால் எதிர்க்காமல் சிறைச்சாலை செல்வது என்றும் ஒவ்வொரு நாளைக்கும் 50 பேர் என்றால் அந்த 50 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்று இவ்வளவு வரையறை, இவ்வளவு கட்டுதிட்டங்கள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வகுக்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது அரிசிப் பிரச்சினையில் போராட்டம் நடத்தி இருக்கிறது. அப்படி நடத்தப்படுகிற அறப்போராட்டங்கள் மூலம் மெல்ல மெல்ல எதிர்க்கட்சிகள் வலிவு ஏற்று, மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் வரையில், அந்த எதிர்க்கட்சியை ஆளும்கட்சியாகக் கொண்டு வந்து வைக்கும் வலிமையை எதிர்க்கட்சிகள் பெறுவதுதான் சாலச்சிறந்த, சிறப்பான வரவேற்கத்தக்க, வன்முறை அற்ற எதிர்க்கட்சிகளுடைய போராட்ட முறைகளாக இருந்திட வேண்டும். அதை விடுத்து இதையே ஒரு பெரிய பிரச்சினையாக்கி, அதை மேலும் சிக்கலாக்கி வன்முறையைத் தூண்டவேண்டுமென்ற அளவுக்குப் பத்திரிகையில் தலையங்கம் போட்டு, அதை இந்த அளவுக்குக் கொண்டுவந்து விட்டது தமிழகத்திலே இருக்கிற சில எதிர்க் கட்சிகளின் பணியாக ஆகிவிட்டது என்பதை நான் மிகுந்த மனவேதனையோடு சொல்லாமல் இருக்க முடியாது.
பத்திரிகைத் தலைப்பை பார்த்தால், ஆளும் காங்கிரஸ்
பத்திரிகை மித்திரன்
—
—
"பல இடங்களில் அரிசிக் கடைகள்
சூறை" சொன்னார்கள். சூறையிடவில்லை. எடுத்துத்தான்