உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சொன்னவுடன் கம்யூனிஸ்ட்க்

கட்சி உறுப்பினர்களும்

ப்ரொடெஸ்ட் பண்ணி வெளியில் வந்திருக்கிறார்கள் என்பதைக்

குறிப்பிட விரும்புகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் நாடாளுமன்றத்தைத்தான் குறிப்பிட்டேன். அவர்கள் மாநிலங்கள் அவைபற்றிச் சொன்னார்கள். அங்கேயாவது கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் அந்த அளவுக்கு வேகமாக நடந்து கொண்டதற்காகப் பாராட்டைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரு. கே.டி.கே. தங்கமணி : நான் ராஜ்ய சபையில் நடந்த சம்பவத்தைத்தான் குறிப்பிட்டேன்.

என்

று

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : லோக் சபாவை நாடாளுமன்றம் என்றும், ராஜ்ய சபாவை மாநில அவை என்றும் நாங்கள் குறிக்கும் பழக்கத்தில் நானும் ராஜ்ய சபாவைத்தான் மாநில அவை என்று கூறினேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்கள் சொல்லவில்லை குறிப்பிட்டேனே அல்லாமல் வேறு அல்ல. திரு மொரார்ஜி தேசாய் இப்படி ஒரு சத்தியாக்கிரகம் செய்து ஒரு அறிக்கையைப் பெறுவது முறையா என்று தி.மு.கழகத்தைக் கேட்ட நேரத்தில் 'அது முறை அல்ல', என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். அது முறை அல்ல என்றுதான் அங்குள்ள அண்ணா தி.மு.க.வும் அங்கே அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இங்கே அந்த முறை அனுஷ்டிக்கப்படலாம் என்பதற்கு அவர்கள் முன்வந்தார்கள் என்றாலும் இங்கே அப்படிப்பட்ட சங்கடங்களுக்கு எல்லாம் இடம் இல்லாமல் உடனடியாக அந்த ஃபைல் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அது வெளிப்படையாகக் காட்டப்பட்டு, எந்தவிதமான நிபந்தனைகளும் வைக்கப்படாமல் பார்க்கலாம், ஆனால் வெளியில் சொல்லக்கூடாது; சிதம்பர ரகசியமாக இருக்க வேண்டுமென்று நிபந்தனை போடாமல் பார்த்தாலும் குறிப்பு எடுக்கக்கூடாது என்று கூறாமல் இந்த அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய முறையீட்டை ஏற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு வந்திருக்கிறது.