உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

காரியங்கள் என்னென்ன,

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இனி

னி

செய்யப்படவேண்டிய

காரியங்கள் என்னென்ன, இதற்குத் தேவையான நிதி உதவி எவ்வளவு என்று கேட்டார்களா என்றால் கிடையாது.

அது மாத்திரமல்ல. வானொலியில் பேசிய பேச்சைத்தான் 20 அம்சத் திட்டம் என்று இன்றைக்கு எடுத்து வைத்துக் கொண்டு 'ஆகா' எவ்வளவு பெரிய புரட்சிகரமான திட்டம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன், அந்தப் பேச்சைப் பிடித்துக்கொண்டு 20 அம்சத் திட்டம், அது ஒரு புரட்சிகரமான திட்டம் என்று சொல்கிறீர்களா, இந்தத் திட்டத்தில் எது புரட்சி?

பிரதம மந்திரி அவர்கள் வானொலிப் பேச்சில் இனிமேல் தொழில்கள் தேசியமயம் ஆக்கப்படமாட்டாது என்று கூறி யிருக்கிறார்களே, அதை ஏன் 21-வது அம்சம் என்று சேர்த்துக் கொள்ளவில்லை? சிலவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து இருபது அம்சம் என்கிறார்கள். உற்பத்தியாளர்களையும், தொழில் அதிபர்களையும் வைத்துக்கொண்டு இனிமேல் தொழில்களை தேசிய மயம் ஆக்கப் போவதில்லை என்று உறுதி அளித்திருக்கிறார்களே. அதனை 21-வது அம்சமாக சேர்த்துக் கொள்வீர்களா? இது எப்படிப் புரட்சிகரமான திட்டமாகும்?

இந்த 20 அம்சத் திட்டத்தில் 14, 15 திட்டங்களை நிறை வேற்றிய அரசாங்கத்தை, இன்னும் ஒன்றிரண்டு திட்டங்களை நிறைவேற்ற இருக்கிற அரசாங்கத்தை, இந்த 20 அம்சத் திட்டத்தில் இல்லாத திட்டமாக கடந்த 4, 5 ஆண்டுகளாக கிராமப்புறங்களுக்கு நம்முடைய அதிகாரிகள் சென்று மக்களுடைய கருத்துக்களை அறிகிற மனுநீதித் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிற இந்த அரசாங்கத்தை, எந்த மாநிலத்திலும் அந்த மாநில அரசு ஊழியர்களுக்குக் கொடுக் காத சலுகை, அரசாங்க ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்புத் திட்டம் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டு காலத்தில் 2,200 அரசு ஊழியர் குடும்பங்களுக்கு தலைக்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு, இந்தத் திட்டத்தை 20 அம்சத் திட்டத்திற்கு