உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

355

எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த நிலை நாட்டுக்கு நல்லதல்ல” என்று சோளிங்கரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் காமராஜர் பேசியிருக்கிறார் என்று ‘நவசக்தியில்' செய்தி வந்திருக்கிறது.

இது அடுத்த நாள் நவசக்தி. இதில்கூட "வெள்ளைக்காரன் ஆட்சியிலே கூட நடைபெறாத கொடுமை இப்போது நடை பெற்றிருக்கிறது” என்று காமராஜர் அதிர்ச்சி அடைந்து பேசியிருக்கிறார். அடுத்து அவர் சொல்லியிருக்கிறார், "இனி மேல் நான் பேசுவதெல்லாம் பத்திரிகைகளில் வரப்போவ தில்லை; பேசித்தான் பயன் என்ன” என்று குறிப்பிட்டுப் பேசி யிருக்கிறார். அந்த அளவுக்கு மறைந்த தலைவர் காமராஜர் அவர்கள் பேசிய பேச்சு 'நவசக்தி' பத்திரிகையில் அப்போது வந்திருக்கிறது. இது 6.1975 அன்று தேதியிட்டு வெளியிட்ட 'நவசக்தி' ஏடு ஆகும்.

ஹாண்டே அவர்கள் அவசர அவசரமாகப் பத்திரிகையின் தேதியைக் குறித்துக்கொள்கிறார். ஏதோ நான் இப்படி 'முரசொலியில்' ஒரு செய்தியைப் புதிதாக அச்சடித்துக்கொண்டு வந்து விட்டதைப்போல நினைத்துக்கொண்டு குறித்துக்

கொள்கிறார்.

அவசர கால நிலை அறிவித்ததற்கு சில காரணங்களை நம்முடைய நண்பர் மாரிமுத்து அவர்கள் தீர்மானத்தை முன் மொழிந்தபோது அங்கே எடுத்துச் சொன்னார்கள். இயற்கையின் கோளாறால் விலைவாசி ஏறியது. அதற்கு இந்திரா காந்தியா காரணம் என்று கேட்டார். அதே கேள்வியைத் தமிழ்நாட்டில் கேட்டிருக்கக்கூடாதா? விலைவாசி உயர்வுக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் காரணம் என்று போராட்டம் இங்கே நடைபெற்றபோது நம்முடைய மாரிமுத்து அவர்களைப் போன்ற அரசியல் நடுநிலையாளர்கள் அவர்களைச் சந்தித்து விலைவாசி உயர்விற்கு கருணாநிதியா காரணம்? கிடையாது என்று கூறினார்களா என்றால் கிடையாது.