கலைஞரின் சட்டமன்ற உரைகள்
447
சந்தேகமாக இருக்கிறது. விளம்பரம் கொடுக்கப்பட்டும் ஆள் கிடைக்கவில்லை. அந்த நிலைமைகளை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். புகார் கொடுத்திருக்கின்றவர் சட்டபூர்வமாக விசாரணைக்கு வருவதா, வேண்டாமா என்ற சட்டப் பிரச்சினை வேறு. அந்த அடிப்படையிலே ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது என்பதைத்தான் எடுத்துக்காட்டப்பட்டது புகார் கொடுத்த ஆள் இல்லை என்பதுதான் உண்மை நிலை.
கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நான் சொல்வது புகார் கொடுத்தவரைப் பற்றி அல்ல. ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வழக்கு பாதியிலே நிற்கிறது. அந்த நேரத்திலே, இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அந்தக் குழுவே காலியாக்கப் படுகிறது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். யாரைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டத்தை ரத்து செய்தார்கள்? பொதுமக்கள் பிரதிநிதிகள் தவறுகள் புரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கின்ற சட்டத்தை நீங்கள் ரத்து செய்து விட்டீர்கள்.
நான் புதுக்கோட்டை பற்றிச் சொன்னேன். அங்கே மாவட்டக் கலெக்டர் அவர்கள் வெள்ள நிவாரண வேலைகளுக்காக பணம் வசூலிக்கிறார். அப்படி வசூலிக்கக் கூடாது என்று முதல் அமைச்சர் அவர்கள், அப்பணத்தைத் திருப்பித் தரச் சொல்கிறார். அது பாராட்டக்கூடியதாக இருக்கலாம், நான் அதற்குள்ளாக நுழைய விரும்பவில்லை. அது அரசாங்கத்தைப் பொறுத்த நிர்வாக விவகாரம்.
யில்
ஆனால் அதே நேரத்தில் திருச்சியிலே நடன நிகழ்ச்சிக்கு பல அமைச்சர்கள் சென்று, நேரடியாக பணம் வசூலித்திருக் கிறார்கள். அது எந்த வகையிலே நியாயம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோல் அமைச்சர்கள் பழனிக்குப் போய், அங்கே உள்ள வியாபாரிகளை நேரிலே வரச்சொல்லி யார் யார் எவ்வளவு இன்கம்டாக்ஸ் கட்டுகிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களிடத்தில் அதற்குத் தகுந்தாற்போல் கட்சிக்காக நிதி வசூலிக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களுக்காக வெள்ள நிவாரணத்திற்காக வசூலிக்கப்பட்டதைத் திருப்பித் தர சொன்ன முதல் அமைச்சர் அவர்கள், இதிலே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.