460
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
திருத்திக்கொள்ளவும் இந்தத் தீர்மானம் பயன்படும். அதற்காகவே இந்தத் தீர்மானத்தை நாங்கள் கொண்டுவந்திருக்கிறோம். இல்லாவிட்டால் ஆறுமாத காலத்திற்குள்ளாக இந்த அரசு பதவியிழக்க வேண்டுமென்ற அடிப்படையிலே நாங்கள் நிச்சயமாகத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கமாட்டோம் என்று மிகத் தெளிவாக நான் குறிப்பிட்டிருக்கிறேன்
அ
அதற்குப் பிறகு, இந்த ஆட்சி அமைந்த பிறகு ஏறக்குறைய இரண்டாண்டுகளை எட்டிப்பிடிக்கின்ற அளவிற்கு நடைபெற்றிருக்கிறது. இந்த இரண்டாண்டுக் காலத்திற்குள் தமிழகத்திலே நடைபெற்றிருக்கின்ற பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, இதன் காரணமாக இந்த அரசின்மீது நம்பிக்கை யில்லை; திருத்தப் பார்த்தோம்; முதன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, ஆனால் முயன்று முயன்று பார்த்தோம்; திருத்த முடியவில்லை. எனவே, இப்பொழுது நாங்கள் கண்டனத் தீர்மானங்களையும், நம்பிக்கையில்லாத் தீர்மானங் களையும், இந்த அரசின் மீது அளித்திருக்கிறோம் என்று நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
8 தேர்தல் நேரத்திற்கு முன்பு, இன்றைய முதலமைச்சரவர்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்கள். அதிலே மிக முக்கியமான ஒரு வாக்குறுதி, அவரது கைப்படவே எழுதிய கட்டுரையாகத் தென்னகம் பத்திரிகையில், ஆனந்த விகடன் பத்திரிகையில் அழகாக வெளியிடப்பட்டது. அதிலே அவர்கள் குறிப்பிட்டார்கள்:
20
ஒருசில
"நான்கைந்து வாரங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சித் தலைவரும் எனது மரியாதைக்குரியவருமான பி.ராமமூர்த்தி அவர்கள் அ.தி.மு.க வுக்கு என்ன கொள்கை என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டபோது நான் சொன்ன சிலவற்றில் விவசாயிகளுக்குத் தரப்படவேண்டிய வருவாய் உத்திரவாதத்தைப் பற்றியும் சொன்னேன். நான் சொன்னது, சொல்வது இதுதான். வருடத்தில் ஒரு சில மாதங்களே வேலை. அதற்குப் பிறகு எங்கோ, எப்படியோ அன்றாட கூலி வேலைகளைத் தேடி அலைந்து, ஏதாவது ஓர்நாள் கிடைக்கும் மிக மிகக் குறைந்த கூலியைக் கொண்டு கஞ்சிகூட சரிவரக் குடிக்காமல் வாடுகின்றவர்களுக்கு முதலில் மாதம் இவ்வளவு வருவாய் கிடைக்கும், அதாவது தரப்படும் என்கின்ற உத்திரவாதம், காப்பு நிதி போனஸ் போன்ற