உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அவரே சொல்கிற மாதிரி "புழுதி வாரி தூற்றுகிற" அந்தப் பணியில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே நீதிமன்றத் திற்கு சென்றது அது அல்ல. நீதிமன்றத்திற்குச் சென்றது திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் மேல் சபைக்கு நின்றதை எதிர்த்து தேவசகாயம் தொடர்ந்த வழக்கு. அந்த விவரத்திற் குள்ளே நுழைய நான் தயாராக இல்லை. அந்தத் தீர்ப்பைப் பற்றிச் சரியா தவறா என்று சொல்ல வரவில்லை. ஆனால், 1977-ல் பதவிக்கு வந்த பிறகு, ஒரு பெரிய ஒப்பந்தம் அவர் உரிமையாளராக இருக்கும் நிறுவனத்திற்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை பெற்ற பிறகு 1978 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 28 ஆம் நாளில் மேலவைத் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்.

மாண்புமிகு திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி எழுந்திருக்கிறார்:

மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன்: தயவு செய்து அமருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் பேசி முடிக்கும் வரையில் நாங்கள் யாரும் குறுக்கிடப்போவது இல்லை என்று தெரி வித்துக் கொள்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி: 1978 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் நாளில் அவர் அமைச்சர் ஆகிறார். அமைச்சர் ஆவதற்கு முன்பு, அவருக்கே தெரிகிறது தாம் குவாலிடி பிரிண்டர்ஸ் னுடைய உரிமையாளராக இருந்து ஒப்பந்தக்காரராக இருந்த தால் சரியாகாது என்று தெரிகிறது. அதனால் அதை மாற்றி வேறு ஒருவருக்கு விற்றுவிட வேண்டும் என்று விரும்புகிறோர். அதனால் இவர் கடிதம் எழுதினார் பாடநூல் நிறுவனத்தாருக்கு. அவர் கடிதம் எழுதிய தேதி 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 10 ஆம் நாள். அவர் எழுதிய கடிதத்தில் அவருடைய சகோதரர் மாணிக்கம் என்பவருடைய மகன் குணாளன் பெயரால் ஒரு மேகலை எண்டர்பிரைசைஸ் என்ற நிறுவனம் இருப்பதாகவும் அவரை இந்த ஒப்பந்ததாரராகப் பொறுப்பேற்று திரு.கே.ஏ. கிருஷ்ணசாமிக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்.