உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பாடநூல் நிறுவனம் சர்க்காருக்குத் தொடர்புடையது அல்லவா என்பதைப் பற்றிச் சர்க்காரியா விசாரித்து இருக்கிறது. அது குறித்துச் சர்க்காரியா கமிஷன் சொல்கிறது. இதிலே வருகிற குறிப்பில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நோக்கங்கள் பற்றிச் சொல்கிறபோது" தமிழ்நாடு அரசு, இந் நிறுவனத்திற்கு மாற்றித் தரக்கூடிய அதன் சொத்துக்கள், உரிமைகள், சிறப்பு உரிமைகள், பொறுப்புகள் எல்லாவற்றினும் பாடநூல்கள் வெளியிடுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அலுவலையும் ஏனைய நடவடிக்கைகளையும் கையகப்படுத்தி மேற்கொள்வது அந்த அலுவலையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்திவருவது, தமிழ்நாடு அரசு அவ்வப்போது அளிக்கக்கூடிய அதிகாரங்களைச் செலுத்துவது, கடமைகளை ஆற்றுவது, கட்டணங்களை நிறைவேற்றுவது, பொதுக்கல்வி, தொழில் நுட்பக் கல்வியின் முன்னேற்றத்திற்கு ஆக்கம் தருவது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவைகளை மையமாக வைத்துச் சர்க்காரியா அவர்கள் அப்போதிருந்த கல்வி அமைச்சர் அவர்கள் முறைகேடாக நடந்து கொண்டார் என்று சொல்லிச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை விசாரித்து, சர்க்காரியா அவை நிரூபிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் என் மீது சாட்டப்பட்டு இருந்தாலும், அல்லது அன்றைக்கு அமைச்சர் பொறுப்பிலே இருந்தவர்கள் மீது சாட்டப்பட்டு இருந்தாலும், அவைகள் எல்லாம் தவறானது என்று அன்றைக்கு நாங்கள் தெரிவித்துப் புத்தகம்கூட வெளியிட்டு இருக்கிறோம். அதை இந்த அவையில் வைத்துவிட்ட அந்தக் காரணத்தாலே அதுபற்றி நான் ஒன்றும் இப்போது விளக்கமாகப் பதில் அளிக்க விரும்பவில்லை. ஆனால் பாடநூல் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பது சர்க்காரியா அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது பாடநூல் நிறுவனத்தின் நோக்கங்கள், கொள்கைகள், விதிமுறைகள் இவைகளில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதற்காகத்தான் இதை நான் இங்கே எடுத்துக்காட்டினேன்.

ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட பதவிகளுக்கு எல்லாம் வர முடிகிறது. ஒருவர் தூதுவராக ஆக்கப்பட்டு இருக்கிறார்.