கலைஞரின் சட்டமன்ற உரைகள்
501
பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசும்போது பஸ் முதலாளிகளிடம் வாங்கிய பணம் எவ்வளவு லட்சம் என்ற கேள்விக்கணையை விடுத்தார்கள். சினிமா முதலாளிகளிடம் தியேட்டர் முதலாளி களிடமிருந்து வாங்கிய பணம் எவ்வளவு லட்சம் என்ற கேள்விக்கணையை விடுத்தார்கள். இன்னொரு கேள்விக் கணையையும் இதனுடன் சேர்த்து விடுக்கின்றேன். வட்டிக் கடை செல்வந்தர்களிடம் சலுகைகள் செய்வதாக அறிவித்து ஏறத்தாழ 20 லட்சத்திற்கு மேல் இந்த அரசு அரசாங்கத்திலே உள்ள முக்கியமானவர்கள் அதற்குரிய வெகுமானத் தொகை யாகப் பெற்றிருக்கிறார்களா இல்லையா என்று நான் இங்கே எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்னொன்றும் இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். நமது அமைச்சர் திரு. இராஜாமுகமது அவர்கள், இந்த அமைச்சரவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்தவர் அல்ல. அப்போ தெல்லாம் அவர்கள் கார்ப்பரேஷனில் வேலை பார்த்தவர். தங்ளிடம் அனுமதி பெற்றுச் சில கடிதங்களை நான் இங்கே படிக்கிறேன். இந்தக் கடிதங்களின் உண்மை நகல் கோர்ட்டில் இருக்கின்றன. அதனுடைய போட்டோஸ்டெட் காப்பிகள் இதனுடைய இவை; உண்மை நகல்களைப் பார்க்க வேண்டுமானால் முதல் அமைச்சர் அவர்கள் முயன்றால் கோர்ட்டில் இருந்து பெற்றுப் படித்துப்பார்க்க முடியும்.
1975ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1ஆம் நாள் அவர் எழுதுகிறார். சென்னை நகராட்சி மன்றத்திலிருந்து எழுதுகிறார். 1975ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1ஆம் நாளில்
நாடுகிறேன். தங்கள்
அன்புக்குரிய ஜனாப் அப்பாஸ் அவர்களுக்கு எழுதுவது, நலம் நலம் நாடுகிறேன். தங்கள் கடிதம் கண்டேன். தங்களுடைய மகன் விஷயமாய் எனக்குத் தெரிந்த பாதிப்பில் லாத ஒரு முயற்சித்ததில் தங்களுக்கு யோசனை கூறினேன். நெருக்கடி நிலை காரணமாக முயற்சிகள் தடைப்பட்டு வருகின்றன. நான் சந்தித்த என்ஜினீயரைப் பம்பாய்க்கு மாறுதல் செய்ய உத்தரவு இட்டிருக்கிறார்கள். அவர் இம்மாதம் 17ஆம் தேதி பம்பாய்க்குச் செல்கிறார். அதற்குள் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வதாக வாக்களித்துள்ளார்கள். இறைவன் அருள் இருப்பின் காரியம் கைகூடும்.