கலைஞரின் சட்டமன்ற உரைகள்
505
தையே ஒழுங்குபடுத்தி, இங்குக் கறுப்புக் கொடி காட்டியவர் களைத் தனியாக நிற்கவைத்துப் போலீசுக்கு உதவி செய்தார்கள், அப்படியிருக்க நாங்கள் எப்படி அவர்கள் மீது புகார் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். இங் கிருந்து சென்ற அதிகாரி, அவர்களை மிரட்டிவிட்டு வந்தார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டிலே இருக்கின்ற வேறு சில அதிகாரிகள் இந்த அரசுக்குப் பயந்துகொண்டு, பொய் வழக்குப் போடுகின்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்களேயானால், நான் அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான். இன்றைக்கு வேண்டுமென்றால் நீங்கள் எந்த காரியத்தையும் செய்துகொண் டிருக்கலாம். ஆனால் இன்றைக்கு விசாரணைக் கமிஷன் என்பது நாட்டில் ஆட்சிகள் மாறுகிற நேரத்தில் எல்லாம் வைக்கப்படுகிற தொடர்கதையாக ஆகிவிட்டது. எப்படி டெல்லிப் பட்டினத்திலே ஷா கமிஷன் நடைபெற்றதோ அதைப்போல அதிகாரிகளுடைய துஷ்பிரயோகம், அத்துமீறிய நடவடிக்கை இவைகளைப்பற்றி இந்த ஆட்சி மாறிய பிறகு இன்னொரு ஆட்சி வருகிற நேரத்தில் விசாரணை கமிஷன் வரும். அப்போது நிச்சயமாக குற்றவாளிக் கூண்டில் இப்படிப்பட்ட அதிகாரிகள் ஏற்றப்படுவார்கள். அவர்களுடைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்காக இது நிச்சயமாக நடைபெற்றே தீரும் என்பதை இந்த நம்பிக்கை யில்லாத தீர்மானத்தின் மூலம் எச்சரிக்க கடமைப்பட்டி ருக்கிறேன். என்ன நடக்கிறது என்றால், நேர்மையாக நடக்கின்ற அதிகாரிகள் தூக்கி எறியப்படு கின்றார்கள். உமாநாத் அவர்கள்கூட அன்றைக்கு இங்கே குறிப்பிட்டார்கள். தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சி குண்டர்கள் சில பேரைத் திருச்சியிலே இருந்த டி.எஸ்.பி. ஒருவர் கைது செய்தார். அந்தக் காரணத்திற்காக அவர் திருச்சியிலிருந்து நான்குநேரிக்குச் சேருவதற்குள்ளாக அருகாமையிலுள்ள ராதாபுரத்தில் உளிவீச்சு சம்பவம் நடை பெறுகிறது. எனவே, இவர் நான்குநேரிக்குச் சென்று சார்ஜ் எடுத்துக் கொள்வதற்குள் “நீ அங்கே போகாதே, வேறு ஊருக்குப் போ" என்று அவரை அங்கிருந்து மாற்றி விட்டார்கள். இந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்ற அதிகாரிக்குத் தண்டனை வருகிறது.