உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

எந்தெந்தப் பொருள்கள் பற்றி விவாதத்திற்கு என்றைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்போது முதல் அமைச்சர் அவர்கள் 'அவைல பிளாக' (Available) இருந்து பதில் சொல்லத் தேவையான நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்கேற்ப அவரவர்கள் நிகழ்ச்சிக் குறிப்புகளை அறிந்து அலுவல்களை நாம் முறைப் படுத்திக்கொள்வது வழக்கம். அதற்காகத்தான் முதல் அமைச்சர் அவர்களும் அந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்கு வருவது வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக எதிர்க் கட்சிகளுக்குள்ள துர்ப்பாக்கியம் முதல் அமைச்சர் அவர்கள் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்திற்கு வருவதேயில்லை. அவர் வராத காரணத்தால் தாங்கள் அல்லது அவை முன்னவரால் எங்கள் முன்னால் எடுக்கிற முடிவுகளை நாங்கள் மதிக்க மறுப்பவர்கள் என்று பொருள் அல்ல. ஆனால் எடுக்கிற முடிவுகள் இன்றைக்கு நிறைவேற்றப்படுகிறதா என்றால் இல்லை. இந்த இரண்டரை ஆண்டுக்காலத்தில் நிகழ்ச்சி நிரல்கள் ஏதாவது ஒழுங்காகக் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்றிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதைத் தாங்களும் அறிவீர்கள், அவை முன்னவர் அவர்களும் அறிவார்கள். கட்சித் தலைவர்களும் அறிவார்கள். 30ஆம் தேதி அன்று முடித்துவிடலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டதற்குக் காரணமே, நான் என்னுடைய நாட்குறிப்பைப் பார்த்து எனக்கிருக்கிற அலுவல்களை எடுத்துக்கூறினேன் பொதுக்கூட்டம் என்றால், வேண்டுமானால் அதை ரத்து செய்து விடலாம். ஆனால் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு, திருவண்ணா மலைக்கு 2ஆம் தேதி எனது உறவினர் வீட்டுத் திருமணத் திற்குச் செல்லவேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டேன். 30ஆம் தேதி அன்றே முடித்துவிடலாம் என்று சொன்ன உறுதியின் பேரில் இன்றைக்கு இந்த விவாதம் முடியும் என்று தயாராகிக்கொண்ட நிலையில் இருந்தேன். ஆனால், நேற்றைய தினம் தங்களுடைய ஆணைப்படி அல்லது அவை முன்னவருடைய ஆணை என்று கூற மாட்டேன். வேண்டு கோள் என்று கூற மாட்டேன். அறிவித்திருக்கிறபடி இப்போது 3ஆம் தேதிக்கு இது மாற்றப்பட்டிருக்கிறது. இது வாடிக்கை தான். வழக்கமாக நடைபெறுவதுதான் 30ஆம்தேதி அன்று முடித்திருக்கவேண்டிய விவாதம் 3ஆம் தேதிக்கு மாற்றப்