உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

1977-78ஆம் ஆண்டில் என்பதற்காக ஒரு சில சில எடுத்துக் காட்டுகளை மாத்திரம் நான் முன் வைக்க விரும்புகிறேன்.

சேரிப் பகுதிகளை, அரிசன காலனிகளைச் சீரமைப்ப தற்காகத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை பல கோடி ரூபாய். அதிலே ஒரு சல்லிக்காசுகூட செலவு செய்யப்படவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

கிருஷ்ணா தண்ணீரைச் சென்னைக்குக் கொண்டுவரும் திட்டத்தை ஆய்வு செய்ய ஒதுக்கப்பட்ட தொகை 50 இலட்சம் ரூபாயில் எதுவுமே செலவு செய்யப்படவில்லை என்பது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

நீர்ப்பாசன வளர்ச்சிக்காக மூலதனச் செலவாக இந்த அவை அங்கீகரித்த தொகையான சுமார் 4 கோடியே 54 இலட்சம் ரூபாயில் செலவு செய்யப்படாத தொகை சுமார் 3 கோடியே 92 இலட்சம் ரூபாயாகும்.

சென்னையிலே முக்கியமான பிரச்சனையாக இருக்கின்ற குடிநீர்ப் பிரச்சனை; அதற்காக இந்த மாமன்றம் ஒதுக்கிய தொகை 1 கோடியே 84 இலட்சம் ரூபாய். ஆனால் செலவு செய்யப்படாத தொகை அந்த 1 கோடியே 84 இலட்சத்தில், 1 கோடியே 30 இலட்சம். அதாவது 71 சதவீதம் செலவு செய்யப் படவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

பின்தங்கிய சமுதாய மக்களுக்காக இந்த மாமன்றம் அங்கீகரித்த தொகை 6 கோடியே 42 இலட்சம் ரூபாயில் செலவு செய்யப்பட்டது 5 கோடியே 69 இலட்சம். பின்தங்கிய மக்களுக்கு இன்னும் அதிகமாகச் செலவு செய்யப்பட வேண் டும் என்கிற தேவை இருக்கும்போது, அதிலே 72 இலட்ச ரூபாயைச் செலவிடாமல் ஒதுக்கியது வருந்தத்தக்க ஒன்றாகும்.

பொதுச் சுகாதாரத்தில் 'சானிட்டரி' 'வாட்டர் சப்ளை’ போன்ற மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக மூலதன ஒதுக்கீடாக இந்த மாமன்றம் அங்கீகரித்த தொகை 73 இலட்சம். அதிலே செலவு செய்யப்பட்டது 6 இலட்சம்தான். ஆக, 90 சதவீதம் செலவு செய்யப்படவில்லை.

விவசாயத்திற்காக இந்த மாமன்றம் அங்கீகரித்த மூலதனச் செலவு 12 கோடியே 34 இலட்சம் ரூபாய். செலவு செய்த