546
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஒருவருக்கு மிஸ்டர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
Strictly private and confidential
என்று எழுதுகிறார். எங்கே? அங்கே, இங்கல்ல. பல்கேரி யாவில் அந்தக் கடிதம் எழுதப்படுகிறது. அதில் எழுதுகிறார் அந்த அதிகாரி திரு.ராமகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.க்கு
"The terms of our agreement with the broker are generally kept highly confidential. I thereupon request you to consider this letter as strictly private and confidential. we have separately issued another open letter which can be considered an addition to the ship building contract signed by us on 24th march 1979.
இப்படி இடைத்தரகர்களிடத்தில் செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தங்களில் மிக உயர்மட்ட இரகசியங்கள் அடங்கி யிருக்கக் கூடும். இருந்தால்கூட நாங்கள் 24ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தத்தையொட்டித் தொடர்பான ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள உங்களோடு முன்வருகிறோம். எனவே அதற்காக ஒரு ஒப்பந்த லெட்டர் எழுதுகிறோம் என்று இந்த இரகசிய லெட்டரை எழுதுகிறார். அதற்கு இந்த ஆதாரம், இந்த இரகசிய லெட்டரைத் தொடர்ந்து ஓப்பன் லெட்டர் வருகிறது. அந்த ஓப்பன் லெட்டரில் திரு.கே.எஸ். ராமகிருஷ்ணனுக்கு எழுதப்பட்டதுதான், கிட்டதட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அளவிற்கு விலை குறைக்கப்படுகிறது. அது குறைக்கப்பட்டது கொள்ளை என்றும் கூறலாம். அந்த அளவிற்கு அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டு, அங்கிருந்த மேலதிகாரிகளிடம் பேசியதன் காரணமாக, இரகசிய லெட்டர் ஒன்றை எழுதிவிட்டு, இடைத்தரகர்கள் செய்துவிட்டார்கள் என்பதைக் கூறிவிட்டு ஓப்பன் லெட்டர் மூலமாக அந்த ஒப்பந்தத்திற்குத் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு, அந்த ஒப்பந்தப்படி ஒன்றரைக் கோடி ரூபாய் குறைக்கப்படுகிறது. ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு அதிகாரிகள் தமிழகத்திற்கு ஜாம் ஜாம் என்று திரும்புகிறார்கள். முதல் அமைச்சர் அவர்கள் பாராட்டுவார், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டுவார் இப்படி அதிக விலை கொடுக்காமல் வந்து விட்டோமே என்று. ஆனால் அவர்கள் பாராட்டப்படவில்லை.