உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

551

திருக்க வேண்டும். ஆனால் அவர் பதவியிலிருந்து மாற்றப் படுகிறார். வேறு பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. எதுவு மில்லாமல் நிற்கிறார். பிறகு அந்த அதிகாரிக்கு மத்திய அரசு வேலை கொடுப்பதாகச் செய்தி வருகிறது. டெல்லிக்குச் சென்றால் பல குட்டுகள் உடைந்து விடும் அல்லவா? எனவே அவருடைய சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை. அவருக்குத் தவிர்க்க முடியாத பணி இங்கே இருக்கிறது. ஆகவே மத்திய அரசுக்கு அனுப்ப இயலாது என்று தமிழ்நாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தவிர்க்க முடியாத பணி என்ன தெரியுமா? பெரிய பதவி, அடிஷனல் செக்ரட்டரி ஃபார் சோஷியல் வெல்பேர். பூம்புகார் கார்ப்பரேஷனுடைய மானேஜிங் டைரக்டராக இருந்தவருக்கு தவிர்க்க இயலாத பணி இங்கேயிருக்கிறது என்று சொல்லி, இப்போது தரப்பட்டிருக்கிற வேலை அடிஷனல் செக்ரட்டரி ஃபார் சோஷியல் வெல்பேர் என்ற வேலை. இன்னும் அந்த வேலையில் போய் சேராமல், இன்னும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் ராமகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., லீவில் இருந்து வருகிறார் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ம்

இதற்கிடையில், பல்கேரியாவிலிருந்து பல கடிதங்கள் வருகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் ஏன் இன்னும் வாங்கிக் கொள்ளவில்லை. கப்பல்கள் வந்திருக்கின்றன. ஒப்பந்தப்படி வாங்கிக் கொள்ளுங்கள் என்று பல கடிதங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஜனவரியிலே ஆரம்பித்த வியாபார பேரம், இன்னமும் கடிதப் போக்குவரத்திலேயே இருக்கிறதே ஒழிய கப்பல்கள் வாங்கவில்லை.

“14.5.79க்குள் முடிவு தெரியாவிட்டால், மேற்கொண்டு நடவடிக்கைக்கு எங்கள் அரசாங்கத்திடம் எல்லா தஸ்தாவேஜு களையும் தந்து விடுகிறோம்" என்று பல்கேரியா நிறுவனம் எழுதுகிறார்கள். கம்யூனிஸ்ட் அரசாக இருக்கிற காரணத்தால், பல்கேரியா நிறுவனம் தமிழக அரசுக்கு இவ்வாறு எழுது கிறார்கள். "14.5.79க்குள் முடிவு தெரியாவிட்டால், மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் எல்லா தஸ்தா வேஜுகளையும் ஒப்படைத்து விடுவோம்" என்று பல்கேரியா நிறுவனம் எழுதிய பிறகு, 15.5.79 அன்று பூம்புகார் ஷிப்பிங்