உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தலைவராக இருப்பதற்கும் வாய்ப்பளித்தனர். அதற்காக நன்றி” என்று சொன்னீர்கள். அந்த நன்றி உணர்வு என்றைக்கும் பட்டுப் போகாது, அன்று தாங்கள் மொழிந்த அந்த மொழி என்னுடைய உள்ளத்திலே என்றென்றைக்கும் பசுமையாக இருக்கும். இடையிலே எத்தனையோ புயல், எத்தனையோ சூறாவளிகள் எல்லாம் வீசினாலும்கூட, ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அறிஞர் அண்ணா அவர்களுடைய அந்த மொழிகளுக்கு ஏற்ப, என்றென்றும் உங்களை மதிக்கின்றவன் என்கின்ற முறையில் அதைப் போலவே நீங்களும் மற்றவர்களை எத்தனையோ அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கிடையிலே மதிக்கக் கற்றவர்கள் என்ற முறையிலே இந்த மாமன்றத்தின் தலைவராகப் பொறுப் பேற்றிருப்பது சாலவும் பொருத்தமுடையது என்று கூறி, தங்களை மீண்டும் இந்தப் பொறுப்பினை, மேலவைத் துணைத் தலைவர், பிறகு தலைவர், மீண்டும் தலைவர் என்கின்ற அளவுக்கு தொடர்ந்து இந்தப் பொறுப்பினை தங்களுக்கு அளித்த ஆளுங் கட்சிக்கும் என்னுடைய நன்றியைக் கூறி அமைகிறேன்

ஆசிரியர்கள் பிரதிநிதி என்ற முறையிலே, கடந்த 6 ண்டுக்காலமாகவும், அதற்கு முன்னாலும் எங்களுடைய பிரச்சினைகள் வந்த காலத்திலே எல்லாம், அதிகமாக அக்கறை காட்டி, அன்பு பாராட்டி எங்களுக்கு வாய்ப்பு வழங்கி யிருக்கின்றீர்கள். அந்த வாய்ப்பினைத் தொடர்ந்து, அதிகமாகக்கூட வழங்கவேண்டும் என்று தங்களை இந்த நல்ல நேரத்திலே வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக ஒன்றைச் சொல்லியிருக்கின்றீர்கள். தங்களைப் பொறுத்த வரையிலே, தமிழகத்திலே அறியாதவர் ஒருவரும் இல்லை. ஆனால் தாங்கள் 1978ஆம் ஆண்டில் மேலவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது, இந்த மாநிலத்தின் முதல்வர் அவர்கள் கூறிய கருத்து என் மனதின் முன் வருகின்றது.

“தமிழைப் பேசி, தமிழை எழுதி, தமிழகத்திலே தமிழ்ப் புத்துணர்ச்சியை வளர்த்திருக்கின்றீர்கள் தமிழர்களால் அதிகமாக நேசிக்கப்படுகின்றீர்கள். தாங்களும் தமிழர்களை நேசிக்கின்றீர்கள். மாநிலத்தின் அரியாசனத்திலே, தங்களை தமிழை வீற்றிருக்கச் செய்திருக்கிறோம்” என்று சொன்னார்கள்.