உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

39

நடைபெறுகிறது என்பதைத்தான், காந்தியடிகளின் வழியில் நடந்து வந்ததாகக் கூறுகின்ற அமைச்சரவைக்குச் சொல்ல விரும்புகிறேன். இதைத்தான் முரண்பாடு என்று எங்கள் கட்சி உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னார்களே தவிர, எங்களிம் முரண்பாடு இருப்பதாக தயவு செய்து யாரும் எண்ணவேண்டிய தேவையில்லை.

இன்னும் நீதி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், எல்லா மாவட்டங்களிலும் நீதி நிர்வாக அதிகாரம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னையைப் பொறுத்த வரையில் பிரிக்கப்பட்டிருக்கிற நிலைமை இல்லை. எங்கள் கட்சி உறுப்பினர் திரு. மாதவன் அவர்கள் எடுத்துச் சொன்னது மாதிரி, நகரில் 151-வது பிரிவின் கீழ் திடீர் திடீர் என்று பலர் கைது செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படுகின்ற தவறுகளைப்பற்றிச் சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கி யிருப்பதையும் நாம் எல்லோரும் நன்றாக அறிவோம். சென்னை நகரத்தைப் பொறுத்தவரையில், ரிமாண்டில் வைப்பதற்கு இருக்கின்ற அதிகாரம் நீதிபதிகளிடம் இருப்பது இல்லை. போலீஸ் கமிஷனரிடத்தில் இந்த அதிகாரம் வைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் காரணங்களால் இது துர்வினியோகப்படுத்தப்பட ஏது இருக்கிறது. இப்போது துர்வினியோகப்படுத்தப்படுகிறது என்று சொல்லவரவில்லை, அப்படி சொல்ல நான் தயாராக இல்லை. ஆனால் துர்வினியோகப்படுத்துவதற்கு ஏது ஏற்படும் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய நிலைமையில் இருக்கின்ற கஷ்டங்களைப்பற்றி அமைச்சரவை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்ற மாவட்டங்களில் எல்லாம் எவ்வாறு இந்த அதிகாரம் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த அளவுக்கு சென்னை நகரத்தைப் பொறுத்த வரையிலும், பிரிக்கப்பட்டு, ரிமாண்ட் வழங்குவது, காவலில் வைப்பது இவைகள் எல்லாம் நீதிபதியின் பொறுப்பாக இருக்கும்படியான அளவில் மாற்றவேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து, போலீஸ் எப்படிப் பட்சபாதமாக நடந்து கொள்கிறது என்பதை காட்டுவதற்காக இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கோவை மாநகரத்திற்கு அருகே ஏறத்தாழ 5,000 ரூபாய்க்கு பிராந்திப் புட்டிகள் பிடிக்கப்பட்டன என்ற செய்தி இரண்டு, மூன்று நாட்களாக ஏடுகளில் வந்தது.