உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89418

там

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

G002338

61

ANNA CENTENARY LIBRARY பேசுவதை ஒரு முறையாகவும், மனப் பக்குவுமாகவும் மனிதத் தன்மையாகவும் கருதி, அப்படியெல்லாம் பேசியிருக்கிறோம். ஆனால்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : எங்கள் கட்சியின் சார்பிலே திரு. மார்டின் அவர்கள் பூரணமாகப் பேசியிருக்கிறார்கள். நானும் பேசியிருப்பேன், நேரம் இருந்தால்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : யார் பேசியிருந்தாலும், எதிர்கட்சித் தலைவர்களிடமிருந்து ஒரு கோரிக்கையை எதிர் பார்த்தேன். காவல் துறையினருக்கு இன்னன்ன சங்கடங்கள் இருக்கின்றன, இவைகளையெல்லாம் போக்க வேண்டுமென்று சொல்வார்கள் என்று எதிர்பார்தேன். அப்படி அவர்கள் சொல்லவில்லை என்பது உள்ளபடியே எனக்கு வருத்தம் கொடுக்கக்கூடிய ஒன்றுதான். காவல் துறையைப் பற்றி அவர்கள் நடத்திய ஒரு விளையாட்டு விழாவில், மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். "எந்தச் சமுதாயத்திலிருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அந்தச் சமுதயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக் கண்ணாடிகளாக அப்படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகியிருப்பதில்லை. போலீஸ் படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால் அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதேபோல போலீஸ் படையினர் எங்கேனும் செயல் ஆற்றுவதில் தவறுகள் இழைத்தால் சமுதாயத்தில் நிலவும் குறைப்பாட்டையே அவை காட்டுகின்றன.

தங்களால் உருவாக்கப்படாத பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகிற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டி இருக்கிறது. சகலவிதத்திலும் சகிப்புத் தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டிய வர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பெற்ற சிறந்த பயிற்சிக்கு ஒப்ப, கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்து கொள்ள வேண்டி உள்ளது" என்கின்ற கருத்தினை பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த விழாவிலே உரையாற்றுகின்ற நேரத்தில் குறிப்பிட்டார்கள்.