கலைஞரின் சட்டமன்ற உரைகள்
135
மதுரை மத்திய வங்கியில் 90 ஆயிரம் ரூபாய் காணாமல் போயிற்று. காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையால் ஏழு பேர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
காலையிலே பேசிய அம்மையார் அவர்கள் கருமுத்து சிவலிங்கம் செட்டியார் வீட்டிலே நடைபெற்ற கொள்ளை வழக்கிலே இரண்டு, மூன்று மாத காலம் யாருமே கைது செய்யப்படவில்லை. ஆகவே சந்தேகப்படுகிறேன் என்று சொன்னார்கள். தெக்கூர் கருமுத்து சிவலிங்கம் செட்டியார் வீட்டில் கொள்ளை நடந்த தேதி 25-11-1971, காலை 71/2 மணி. வழக்கு விசாரணைக்கு எடுத்த தேதியும் 25-11-1971 தான். தமயந்தி என்பவர் கைது கது செய்யப்பட்ட நாள் 1-12-1971. 25-11-1971க்கும் 1-12-1971-க்கும் இடையிலே மாதக் கணக்கு இல்லை, நாள் கணக்குத்தான் இருக்கிறது. சுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 1-12-1971. சோமன் என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 2-1-1972. ஒருவேளை ஒருவர் 1971ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார், இன்னொருவர் 1972ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்று சொல்லலாம். ஆனால் 1-12-1971க்கும் 2-1-1972க்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். அதோடு முடிகிறது டிசம்பர் மாதம். 1972ஆம் ஆண்டு அடுத்த ஆண்டு. பெரியசாமி என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 5-1-1972 பணையன் என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 7-1-1972. அருணாசலம் என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 7-1-1972 கதிர்வேலு என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 10-1-1972. கதிரேசன் என்பவர் கைது செய்யப்பட்ட நாள் 26-1-72. மேலும் 9 குற்றவாளிகள் நீதிமன்றத்திலே சரணடைந்தார்கள். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இடையே இரண்டொரு நாள் தலைமறைவாக ஓடி ஒளிந்தவர்களை கைது செய்தார்கள். இதற்கு முன்பு இப்படி நடந்ததா என்று எடுத்துப் பார்த்தால் பல ஆதாரங்கள் இருக்கின்றன. முன்பிருந்த அரசிலே ஆறு, ஏழு மாத காலத்திற்குப் பிறகு, குற்றம் பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இதிலே தாமதம்கூட ஏற்படவில்லை. எந்தத் தாமதமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள். அது மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமாக 4 வைர வளையல்கள்
6