192
காவல்துறை பற்றி
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கிரைம் இண்டியா 1970 என்ற இதை வெளியிட்டதற்கு பிறகு எதையும் இன்னும் வெளியிடவில்லை. நான் இந்தப் புள்ளிவிவரங்களைச் சொல்லுவதற்கு காரணம் மத்திய அரசு தந்து இருக்கின்ற புள்ளி விவரங்கள் நம் வாதத்திற்கு வலுவளிப்பதாக இருக்கும் என்பதாலே தந்தேன். அடுத்த புத்தகம் வெளியிட்ட பிறகு அதையும் நான் எடுத்துக்கூறுவேன் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தீண்டாமைக் குற்றங்களைப் பொறுத்தவரையிலும், தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், வழக்குகளே போடப்படுவ தில்லை, யாரும் தண்டிக்கப்படுவதில்லையென்றெல்லாம் சொல்லப்பட்டது.
1969-1972 1969-ஆம் ஆண்டிற்கும் 1972 ஆம் ஆண்டிற்கும் இடையே உள்ள காலத்திற்கான வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள் என்னிடத்திலே இருக்கின்றன, அவற்றைப் பார்த்தால், 1969ஆம் ஆண்டு தீண்டாமைக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டவை 33, தண்டிக்கப்பட்டவை 16, விடுதலை செய்யப்பட்டவை 11, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடிக்கப்பட்டவை 5, சாட்சியம் போதாமை ஆகிய காரணங்களால் திரும்பப்பெற்றவை 1.
வ
1970ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவை 33, தண்டிக்கப்பட்டவை 15, விடுதலை செய்யப்பட்டவை 12, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடிக்கப்பட்டவை 6;
1971ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவை 24, தண்டிக்கப்பட்டவை 10, விடுதலை செய்யப்பட்டவை 13, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடிக்கப்பட்டவை 1; 1972 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவை 842, தண்டிக்கப்பட்டவை 848, விடுதலை செய்யப்பட்டவை 276, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் முடிக்கப்பட்டவை 6.
இதிலே 59 வழக்குகள் சமாதானம் செய்யப்பட்டுவிட்டன,
23 வழக்குகள் கோர்ட்டில் உள்ளன.
1972ஆம் ஆண்டிலே மாத்திரம்
தீண்டாமைக்
குற்றத்திற்காக 777 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள், 476 பேர்கள்