உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

காவல்துறை பற்றி

என்பதையும், அதை இன்றைக்கு அனைத்து இந்தியாவில் இருக்கின்ற அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஏன் உடனடியாக ஒவ்வொரு வழக்கையும் கண்டு பிடிக்கவில்லை என்று வாதிடுகின்றவர்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். 19-12-1970-ல் ஒருவர் இறந்தார், இந்த விஷ ஊசி சம்பந்தமாக, அதற்குப் பிறகு மார்ச் 1971-ல் இன்னொருவர் இறந்தார். பிறகு 9-10-1971-ல் இன்னொருவர் இறந்தார். பிறகு 7-1-1972-ல் இன்னொருவர் இறந்தார். 24-6-1972-ல் இன்னொருவர் இறந்தார். கடைசியாக 26-10-1972-லே இறந்து போன கீழக்கரையைச் சேர்ந்த தைக்கா தம்பியின் மாமனார், சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்தான் புலன் விசாரணையே ஆரம்பமாகியது. ஆக, 1970-ல் நடைபெற்ற கொலை சம்பவங்கள், 1972 வரையில் புலன் விசாரணைக்கு ஆளாகாமல் அவ்வளவு மர்மமாக நடைபெற்றது. ஆயினும், நம் திறமை மிக்க காவல் துறையினர் இந்தக் கொலையைக் கண்டு பிடித்து, கொலையில் ஈடுபட்டவர்களுக் கெல்லாம் தண்டனையை வாங்கித் தந்திருப்பதை நான் மீண்டும் மீண்டும் இந்த அவைக்கு ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள்கூடப் பாராட்டியிருக்கிறார்கள். ஆகவே நான் அதை மீண்டும் இங்கே விளக்க விரும்பவில்லை.

அதைப்போலவே நீங்கள் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றபோது டெலிவிஷனில் ஒன்றைப் பார்த்திருக்கலாம். அதிலே ஒரு தனவந்தரை எப்படிக் கொன்று எந்தப் பொருளும் இல்லாமல் ஏமாந்தார்கள் அந்தத் திருடர்கள் என்பதையும் அவர்கள் எவ்வளவு இளம் வயது படைத்தவர்கள் என்பதை யெல்லாம் பார்க்கும்போது, இந்தச் சமுதாயத்தில் அப்படிப் பட்டவர்களையெல்லாம் திருத்துவதற்கு எவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவைப்படுகிறது என்பதைத்தான் நாமெல்லாம் மிகுந்த வேதனையோடு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சமுதாயத்திலிருக்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் இப்படிப்பட்டக் காரியங்களுக்குக் காரணமாக ஆகின்றன என்பதை நான் மறக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவை களுக்கு இது தான் மார்க்கமா என்கின்ற அந்தக் கேள்விக்கும் நாம் விடை கண்டாக வேண்டும். மிகச் சாதாரண வாலிபர்கள்,