கலைஞரின் சட்டமன்ற உரைகள்
311
துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இரவில் கலவரம், தீவைப்பு, கொலை என்றளவிற்கு சென்று முடிந்தது. இரண்டு முஸ்லிம்கள் இறந்தார்கள். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் இறந்தார்கள். முஸ்லிம் ஒருவர் வீசிய நாட்டு வெடிகுண்டு காரணமாக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதுவும் இந்த அறிக்கையில் காணப்படுகிற கொடுமையான செய்தி.
முகவை மாவட்டத்தில் 1979ஆம் ஆண்டு அரிஜனங் களுக்கும் தேவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மறைந்த தேவர் திருமகனார் பெயரை சூட்டலாம் என்று அரசு கருதியபோது அரிஜனங்கள் டாக்டர் அம்பேத்கார் அல்லது இமானுவேல் பெயரை சூட்ட விரும்பி அதன் காரணமாக இந்த கலவரம் ஏற்பட்டது என்று இந்த ஆய்வுரையில் அரசாங்கச் சார்பில் தரப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் திரு. சுந்தரராஜ் அவர்கள் சொன்னதுபோல், உஞ்சணையில் 1979ஆம் ஆண்டு சூன் 28ஆம் தேதி உஞ்சணை கிராமத்தைச் சேர்ந்த அரிஜனங்கள் அல்லாதாருக்கும் அரிஜனங்களுக்கும் இடையே கலவரம் மூண்டு 18 அரிஜனங்களின் வீடுகள் தீக்கிரையாகியது.
ஐந்து அரிசனங்கள் இறந்தார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஆய்வறிக்கையிலே தரப்பட்ட பல விவரங்களை இங்கே விட்டுவிட்டு, 5, 6 சம்பவங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட்டுக் காட்டினேன்.
இங்கே ஒன்றைப் பார்க்க வேண்டும். உயர் ஜாதிக்காரர்கள், அதற்கடுத்த நிலையிலே உள்ள ஜாதிக்காரர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்று பிரிக்கப் படுகின்றபோது அல்லது மதவாதப்படி, புராணீகர் வாதப்படி காலிலே பிறந்தவர்கள், தோளிலே பிறந்தவர்கள், தொடையிலே பிறந்தவர்கள், தலையிலே பிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டு, பிரிக்கப்பட்டிருக்கின்றனர். வர்ணாசிரம தர்மப்படி இன்றைக்கு தலையிலே பிறந்த உயர்ஜாதிக்காரர்களுக்கும், காலிலே