கலைஞரின் சட்டமன்ற உரைகள்
313
காலத்தில், ஜூன், ஜூலை ஆகிய இந்த இரண்டு மாத காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மாத்திரம் நான் இரண்டு இரண்டு வரிகளிலே தொகுத்துக்கூற விரும்புகிறேன். ஆய்வறிக்கையிலே இடம் பெறாத காரணத்தினால், அரசுக்கும் பயன்தரும், மக்களுடைய கவனத்திற்கும் வரும். இனிமேலாவது காவல் துறையினர் கொஞ்சம் கண்காணிப்பாக, விழிப்புணர்ச்சியோடு செயல்படுவதற்கு இது பயன்படும் என்ற நல்ல நோக்கத்தோடு, இவைகளை நான் இங்கே தொகுத்துக்கூற விரும்புகிறேன்.
பொன்னேரி அருகில் அனுப்பம்பட்டு பெரிய காரணியைச் சேர்ந்த ஆனந்தன் படுகொலை; இது ஒரு செய்தி, புதுவைக்கு அருகில் பண்டசோழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வத்சலா, ராணி என்ற அரிசன பெண்களைத் தூக்கிப்போய் கற்பழிப்பு, ஆலங்குளம் அருகே அகரத்தைச் சேர்ந்த உப்பிலித் தேவர், சுடலையாண்டிப் பிள்ளை, பிச்சைக்கண்ணுத் தேவர் ஆகியோர் வெட்டி கொலை கொச்சின் எக்ஸ்பிரஸ் வண்டியிலே வந்துகொண்டிருந்த அதிகாரி ராமகிருஷ்ணனுடைய மனைவியின் தாலியை கோவைக்கு அருகே பறித்துக்கொண்டு சென்றார்கள். திருச்சி, தேவிமங்கலத்திலே ஆறுமுகம் என்பவர் மர்மச் சாவு. சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் சுந்தரராஜன் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை. சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், போலீஸ் காலனியில் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு பெண் கற்பழிப்பு. தஞ்சை மாவட்டத்திலே மாஞ்சேரி கிராமத்தில் சரோஜா என்ற ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப் பட்டு கொலை. கிருஷ்ணகிரி தாலுகா, வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த 16 வயது பேபி என்ற அரிசனப் பெண் கடத்தல், கோவை, பீளமேட்டில் தேவராஜ், விஜயகுமாரன் என்ற மாணவர்கள் கடத்தல், கோவை மாவட்டம், குறிச்சியில் ஆறுமுகம் அவர்கள் மகள் லட்சுமியை மயக்கி கற்பழித்தல். திருவான்மியூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி கத்தியால் குத்தப்பட்டு கொலை. பேரணாம்பட்டை அடுத்த பல்லவ குப்பத்தில் நந்தன் படுகொலை. சென்னை, எக்மோர் ஆஸ்பத்திரியில் தில்லைநாயகி என்ற பெண்ணின் குழந்தை திருடப்பட்ட சம்பவம்.
திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் இலஞ்சியம் என்பவருடைய பெண் குழந்தை திருடப்பட்ட சம்பவம்.