324
காவல்துறை பற்றி
பரவாயில்லை. சிதறிய நீர்த் துளிகள் போல பிசுபிசுத்துவிட்டது. இந்த கிளர்ச்சி என்று முதலமைச்சர் தன்னுடைய முடிவுரையிலே இந்த அறிக்கையிலே குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ? இப்படிப் பிசு பிசுத்துப் போன கிளர்ச்சி; 70 சதவிகிதம் பேர் எதிர்த்து நின்ற கிளர்ச்சி; 30 சதவிகிதம் பேர்தான் நடத்திய கிளர்ச்சி; நைனார்தாசே கூட 3 சங்கங்கள் இருக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகு அணைந்துபோன கிளர்ச்சி. இப்படிப்பட்ட கிளர்ச்சியைப்பற்றி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத் தேர்தல் நேரத்திலே அளித்த வாக்குறுதி “காவல் துறையினரின் நலன்களையும் நியாயமான உரிமைகளையும் காண்பதற்காக மிகப் பெரும்பாலோர் விருப்பப்படி காவலர் முதல் ஆய்வாளர் வரை உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் அமைக்க காவலர் பிரிவுக்கு அனுமதி வழங்கப்படும்". அவர்களுடைய கோரிக்கையே இதுதான். ஆய்வாளர் முதல் காவலர் வரையில் உள்ள அந்தப் பிரிவு இணைக்கப்பட்டு தனி சங்க அங்கீகாரம் அதற்கு வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. இதுதான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது தேவையில்லை என்று நைனார்தாஸ் அறிவித்துவிட்டதாக அவர் பேரால் ஒரு அறிக்கை வெளிவந்தது. இந்தக் கிளர்ச்சி பிசுபிசுத்துவிட்டது என்றும் சொல்லப்பட்டாகிவிட்டது. ஆனால் தேர்தல் காலத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற தேர்தல் நேரத்திலே அவர் அளித்த வாக்குறுதி போலீசார் அந்த கிளர்ச்சியை நடத்திய தலைவர்களை சந்தித்த போதும் பொதுக்கூட்டங்களில் பேசிய போதும் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். காவலர் முதல் ஆய்வாளர் வரையில் உறுப்பினர்களாகக் கொண்டு சங்கம் அமைக்க காவலர் பிரிவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
அது மாத்திரம் அல்ல. டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்த 800-க்கு மேற்பட்ட காவல்துறை நண்பர்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது அவர்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஆனால் அந்த வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட அனுப்பப்பட்டுள்ள அந்த ஜி. ஓ. என்ன குறிப்பிடுகிறது என்றால்.