உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

காவல்துறை பற்றி

இருக்கிறது. அது ஏழாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படவில்லை. ஒருவேளை, அப்பொழுதெல்லாம் காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் போலீஸ் மானியத்திலே பேசினாரோ, என்னவோ எனக்குத் தெரியாது. இந்த விகிதாச்சாரம் அப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. நேரடித் தேர்வு அப்போதெல்லாம் நடத்தப்படவில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.

இதைத்தான் நான் அந்தப் பத்திரிகையினுடைய கட்டுரைக்கு விளக்கமாக அளிக்க விரும்புகிறேன். மிக முக்கியமாக கடந்த 20 அல்லது 25 நாட்களுக்கும் மேலாக இந்த மாமன்றத்தில் நேற்றும், இன்றும்தான் போலீஸ் மானியம் என்ற பெயரிலே விவாதம் நடைபெறுகிறதே அல்லாமல் - ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் முடிந்த பிறகு ஒரு அரை மணி நேரம் போலீஸ் மானிய விவாதம் நடைபெற்று இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடுவதற்கில்லை. அதனால்தான் பலபேருடைய பேச்சில் அதிக விஷயங்கள் கூட இல்லாமல் போய்விட்டது. காரணம், எல்லாவற்றுக்கும் ஒத்திவைப்புத் தீர்மானம். திண்டுக் கல்லா? ஒத்திவைப்பு. ஆம்பூரா? ஒத்திவைப்பு. அதேபோல் ராஜபாளையமா? ஒத்திவைப்பு. சாத்தூரா? ஒத்திவைப்பு, இராஜபாளையத்தின் முதல் பாகம் ஒத்திவைப்புத் தீர்மானம். இரண்டாம் பாகம்தான் மிச்சம் இருக்கிறது எனக்கு இப்போது, அந்த இரண்டாம் பாகத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்பதால் அதைப் படித்துக் காட்ட விரும்புகிறேன்.

காமராஜர் மாவட்டம் சேத்தூர் காவல் நிலைய சரகத்தில் கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், போன்ற கிராமங்களில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், ஜாதி இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரங்கள் குறித்து இதே அவையில் ஏப்ரல், 23-ஆம் தேதி விளக்கமான குறிப்புகள் வழங்கப்பட்டன. அதற்குப் பிறகும் அந்தப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் ஒரு சில நாட்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. இதே போன்று கடந்த 1987-ஆம் ஆண்டு ஒரு கலவரம், இராஜபாளைம் பகுதியில் ஏற்பட்டு 10 பேர் அப்போது கொலையுண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1987-லே இதே பகுதியிலே, இதே மக்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டு 10 பேர் அப்போது இறந்தார்கள். அன்றைக்கு ஏற்பட்ட