உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

423

என்று சொல்கின்ற அந்த வகை காவல் துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு வகையினரும் திருந்த வேண்டும். அவசரப்படவும் கூடாது. ஒருவர் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டைச் சொல்லவும் கூடாது. தெரியாமல் ஒருவரை சிறைப் பிடிக்கவும் கூடாது; கைது செய்யவும் கூடாது. ஏதோ, வேண்டியவர் என்று தெரிந்து, தப்பித்துக் கொள்ள வேறு ஏதோ சமாதானம் சொல்லி, சமாளித்துக் கொள்ளவும் கூடாது. இப்படிப்பட்ட இரண்டு வகையினர்களால் நாடு கெடும்; சமுதாயம் சீரழியவும் என்பதை எண்ணிப் பார்த்து அவர்கள் செயல்படுவார்கள் என்பதிலே எனக்குத் தெளிவான கருத்து உண்டு.

இந்த மானியத்திலே பேசும்போது, நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர், சுப்பராயன் அவர்கள், மானியக் கோரிக்கையிலே எடுத்துக் கூறப்பட்டிருக்கின்ற வாசகங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, சமூகப் பார்வையோடு காவல் துறை நடந்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் கோடிட்டுச் சொல்லி, குறிப்பாக, அன்றைக்கு அவருடைய பேச்சிலே முக்கால் பகுதியில் நடைபாதைக் கடைகளுக்காக வாதிட்டார். அப்படி வாதிடும்போது சொன்னார். ஏதோ போலீஸ் அதிகாரிகள் கொடுக்கின்ற 'போட்டோ' படங்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் தீர்மானிக்கக்கூடாது என்று சொன்னார்கள். நான் அந்த 'போட்டோ' படங்களையெல்லாம் இந்த அவையிலே அவரிடத்தில் காட்டினேன். எதிர்க் கட்சித் தலைவரிடத்திலும், மற்ற உறுப்பினர்களிடத்திலும் காட்டினேன். எதற்காகக் காட்டினேன் என்றால், சாலைகளில் மக்கள் நடக்க முடியாமல், அகன்ற சாலையாக இருந்தாலும்கூட, அதிலே பாதிக்குமேல் சாலைகளை அடைத்து பேருந்துகள் செல்லமுடியாமல், ஆட்டோ ரிக்ஷாக்கள்கூடச் செல்லமுடியாமல் இருக்கின்ற அளவிற்கு, போக்குவரத்து நெருக்கடி இந்த நடைபாதைக் கடைகளால் ஏற்பட்டிருக்கின்றது. அவைகளை அறவே அழித்து விடவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்தக் கருத்தைக் கொண்டவனும் அல்ல நான். நடைபதைக் கடைவாசிகள் ஏதோ அவர்களுடைய வயிற்றை வளர்க்க, அன்றாடம் காய்ச்சுவதற்காக, அந்த அங்காடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறியாதவன் அல்ல. ஆனாலும், சென்னை போன்ற நகரங்களில், கோவை,