கலைஞரின் சட்டமன்ற உரைகள்
441
விரும்புகிறேன். தமிழகக் காவல் துறையின் சிறப்பான பணிகளுக்குப் பின்பலமாக அமைந்து ஊக்கமுடன் உழைத்து வருபவர்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆவார்கள். அன்றைக்கு டி. மணி அவர்கள் குறிப்பிட்டார்கள். மற்றவர்களும் குறிப்பிட்டார்கள். இத்தகைய பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பெருக்கும் நோக்கத்துடன் 1976ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளராய்ப் பணியில் சேர்ந்து தற்போது உதவியாளர்களாய் பணி புரிந்து வரும் 329 பேரின் உதவியாளர் பணியிடங்கள் கண்காணிப்பாளர் நிலைக்கு உயர்த்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). இவ்வாறு 329 பணியிடங்கள் கண்காணிப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதன் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 7 லட்சத்து 81 ஆயிரத்து 704 ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு. கூடுதலாகச் செலவாகும்.
காவல் துறையினருக்கான சீருடையை அவர்கள் சிறப்பாக அணிந்து வரவேண்டும் என்பதற்காக அவர்களுக்குச் சீருடை சலவைப்படி (Washing Allowance) அரசால் தற்போது வழங்கப் படுகிறது. தற்போது வழங்கப்படும் அந்த சீருடைப் படியை ரூ. 25லிருந்து இனி ரூ.30 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சீருடைப் படி உயர்வினால் ஒரு ஆண்டுக்கு அரசுக்குக் கூடுதலாக ஏற்படும் செலவு ரூ. 46,96,020. இதன் மூலம் 78,267 காவலர்கள் பயன் பெறுவார்கள்.
காவல் துறையின் விரைவான நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பவர்கள் ஓட்டுநர்கள். 1989ஆம் ஆண்டு கழக ஆட்சியின் போது ஐந்தாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று அவர்களுக்கு ரூ. 40 சிறப்பூதியம் வழங்கப்பட்டது. பிறகு வந்த ஆட்சியில் எதுவும் உயர்த்தப்படவில்லை. தற்போதுள்ள அந்த 40 ரூபாய் சிறப்பூதியம் 60 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வு காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 13,84,080 கூடுதலாகச் செலவாகும். இதன் மூலம் 5,767 ஓட்டுநர்கள் பயன் பெறுவார்கள்.
அடுத்து ஊக்க ஊதியம். ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பாகப் பணிபுரியும் காவலர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு