444
காவல்துறை பற்றி
விவாதத்திலே பங்கேற்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் காவலர்களுடைய எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். 1987ஆம் ஆண்டு நேரடி தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட 1010 காவல் உதவி ஆய்வாளர்கள் நிலை குறித்து சில சந்தேகங்களை கிளப்பினார்கள். 1989ஆம் ஆண்டு மீண்டும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, அதற்கு முன்பிருந்த அ.இ.அ.தி.மு.க. அரசு தேர்வு செய்த உதவி ஆய்வாளர்கள் என்ற பாரபட்சம் காட்டாமல், அவர்கள் அனைவருக்கும் பயிற்சி தருவதற்கான உத்தரவை கழக அரசு பிறப்பித்தது. அதன்படி அவர்கள் எல்லோரும் இன்று பணியில் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த 1010 பேர்களில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு நியமனம் பெறாத 395 உதவி ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவில் காலியிடம் ஏற்படும்போது தங்களை அங்கே நியமிக்க வேண்டுமென்று கோரி இருந்தார்கள். அதையும் அரசு பரிசீலனை செய்து படிப்படியாக அவர்களை ஆயுதப்படைப் பிரிவு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவிலேயிருந்து சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு மாற்றலாம் என்றும், அதற்கு ஏதுவாக இந்த உதவி ஆய்வாளர்களை 6 மாத காலம் காவல் பயிற்சிக் 6 கல்லூரிக்கும், 3 மாத காலம் காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அளிக்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. இரண்டு கட்டமாக இதுவரையில் 310 நபர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 85 உதவி ஆய்வாளர்கள் மூன்றாவது கட்டமாக பயிற்சிக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். இந்தப் பயிற்சி முடிந்ததும் அவர்களை காலியாக இருக்கும் இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றலாம் என்று முடிவை இந்த அரசு எடுத்திருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு இந்த மன்றத்திலே அறிவிக்கிறேன். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தாலும், கழக அரசு பொறுப்பிலே இருந்தபோது நியமிக்கப்பட்டிருந்தாலும், வேறுபாடு காட்டாமல் காவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப பதவிகளை அளிப்பதில் இந்த அரசு எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இதே அடிப்படையில்தான் ஜெயலலிதா அரசு தேர்வு செய்து பணி நியமனம் வழங்கப் படாமல் இருந்த 10,000 காவலர்களையும், 600 காவல் உதவி ஆய்வாளர்களையும், 1060 தீயணைப்போர்களையும் பணியில்