500
காவல்துறை பற்றி
பிரயோகமா என்று கேட்டார். துப்பாக்கிப் பிரயோகம் திடீரென்று 63 ஆக ஆகிவிடவில்லை. இப்போது குறைந்திருக்கின்றது 1997-லே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதற்கான காரணம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மதக் கலவரம், ஜாதிக் கலவரம் இவைகளெல்லாம் வெகுவாக மூண்டெழுந்து, அப்போது ஏற்பட்ட கலவரங்களை அடக்குகின்ற சூழ்நிலையிலே துப்பாக்கிப் பிரயோகங்கள் தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டன.
1991 ஆம் ஆண்டு 33 துப்பாக்கிப் பிரயோகம்; 1992-ல் 67 துப்பாக்கிப் பிரயோகம்; 1993-ல் 63; 1994-ல் 23; 1995-ல் 32; 1996-ல் 24; 1997-ல் 63; 1998-ல் இந்த மாதம் வரையில் 5.
அதைப்போலவே காவல் நிலைய மரணங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் - 'லாக்-அப்' சாவு அது வெகுவாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 1995-ல் 19-ஆக இருந்த காவல் நிலைய மரண எண்ணிக்கை 1996, 1997-ல் முறையே 13. 16 என்ற அளவிலே குறைந்தது. 1998 ஆம் ஆண்டில் இதுவரையில் அப்படி காவல் நிலையத்திலே போலீஸ் லாக்-அப்பில் ஒரு நிகழ்வுகூட ஏற்படவில்லை என்ற நிலையிலே (மேசையைத் தட்டும் ஒலி), என்னிடத்திலே இந்தப் பட்டியல் தரப்பட்ட வரையிலே இருக்கிறது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
-
சில குறைபாடுகளுக்கும் அல்லது குற்றச்சாட்டுகளுக்கும் நான் பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். அந்தக் குற்றச்சாட்டுகள் சொல்லப்படும்பொழுது பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் எல்லாம் நான் செல்ல விரும்பவில்லை. திரு. செல்லக்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன் என்று சொன்னார். பகடைக் காயாகக் காவலர்களை நான் பயன்படுத்து வதாகச் சொன்னார். நான் அவைகளுக்கு எல்லாம் பதிலுக்கு பதில் அளித்து ஒரு நல்லுறவைக் கெடுத்துக் கொள்ள விரும்ப வில்லை. இருந்தாலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காவிட்டால், அதற்குப் பதிலே இல்லை போலும் என்று ஆகிவிடும் என்பதற்காக அதிலே சில விளக்கங்களை நான் அளிக்க விரும்புகின்றேன்.