உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




530

காவல்துறை பற்றி

இருந்து வருகிறது. இனிமேல் இந்த இடர்படி பின்வருமாறு உயர்த்தி வழங்கப்படும்:-

காவலர் முதல் ஆய்வாளர் வரை ரூபாய் 50 என்றும், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ரூ. 60 என்றும் வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 5.16 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

காவல்துறையிலே பதவி உயர்வு இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டு இருப்பதாக பத்திரிகைகள் எல்லாம் எழுதுகின்றன. எல்லாப் பத்திரிகைகளும் எழுதுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ அல்லது தெரிந்தும் வேண்டுமென்றோ சில பத்திரிகைள் எழுதுகின்றன. அதில் ஒரு குறிப்பை மாத்திரம் படித்துக் காட்டுகிறேன். இதிலே Director-General of Police, of Additional Director-General of Police எல்லாம் தேவை இல்லை என்று கருதுகிறேன். Additional Superintendent of Police என்று எடுத்துக்கொண்டால் 55 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Deputy Superintendent of Police என்று எடுத்துக்கொண்டால் 130 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Inspector of Police (Taluk) என்று எடுத்துக்கொண்டால் 255 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Inspector of Police (Armed Reserve)

என்று

எடுத்துக்கொண்டால் 53 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Sub-Inspector of Police (Taluk) என்று எடுத்துக்கொண்டால் 173 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Sub-Inspector of Police (Armed Reserve) என்று எடுத்துக்கொண்டால் 208 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Head Constable என்று எடுத்துக்கொண்டால் 9000 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக் கின்றன. Grade-I Police Constable என்று எடுத்துக்கொண்டால் 10106 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Women Head Constable எடுத்துக்கொண்டால் 400 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. மொத்தம் 20,500 பதவி உயர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. Ac- tual Strength - 80,322; இதிலே Percentage of Actual Strength benefitted through promotion - 25.52%.

என்று