538
காவல்துறை பற்றி
சாலச் சிறந்தவை என்பதுபற்றியும், காவல் துறை எப்படிப்பட்ட இன்னல்கள், இடையூறுகள், இவைகளையெல்லாம் கடந்து தன் கடமையை ஆற்ற வேண்டியிருக்கிறது என்பது குறித்தும் கூறப்பட்ட வாசகங்களில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை. அப்போது ஏறத்தாழ 5 கோடி மக்கள் தமிழகத்திலே இருக்கிறார்கள் என்றால், இந்த 5 கோடி மக்களிடத்திலே சட்டம் ஒழுங்கு, அமைதி இவைகளை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பை ஏற்று பணியில் இருக்கின்ற காவலர்களின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 50 ஆயிரம் பேர்தான். இதை ஒரு சராசரி கணக்காகப் பார்த்தாலும்கூட 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது, இந்த 5 கோடி மக்களின் பிரச்சினை களையும் அவர்களிடத்திலே ஏற்படுகின்ற பூசல்களையும் சச்சரவு களையும் சட்டம் ஒழுங்கு அமைதி இவற்றிக்கு இடையூறாக நடைபெறுகின்ற காரியங்களைக் கவனிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பொறுப்பேற்றுக்கொண்டு சில நேரங்களில் தங்களுடைய உயிரையும்கூடத் துச்சமாக மதித்துப் பணியாற்றுகின்ற, தொண்டாற்றுகின்ற காவலர்கள்பேரில் என்றைக்குமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓர் அனுதாபம் உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று 1982ஆம் ஆண்டு இதே அவையிலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்து நான் ஆற்றிய உரையிலே குறிப்பிட்டு இருக்கின்றேன்.
ஓர் ஆளுங்கட்சியின் சார்பிலே பேசுகின்ற உறுப்பினரைப் போலவே காவலர்களைப்பற்றிப் பேசிய அந்த நேரத்திலே நான் இந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறேன். அதற்குக் காரணம், காவல் துறையிலே எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. இதை நாம் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருடைய தீய செயல்கள், அடாத காரியங்கள், தவறான போக்கு ஆகியவை அந்தத் துறை முழுவதற்கும் உரியது என்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. எத்தனையோ துறைகள் நாட்டில் இருக்கின்றன. மருத்துவர்கள் இருக்கின்றார்கள். ஒரு டாக்டர் தவறு செய்துவிட்ட காரணத்தால் அல்லது 10 டாக்டர்கள் தவறு செய்துவிட்ட காரணத்தால் மாநிலத்திலே இருக்கிற 10,000 டாக்டர்களும் தவறானவர்கள் என்று பொருள்கொள்ள முடியாது. ஓர் ஆசிரியரோ அல்லது அலுவலரோ, ஓர் அதிகாரியோ தவறு செய்துவிட்ட காரணத்தால் எல்லா அதிகாரிகளும் தவறானவர்கள்