கலைஞரின் சட்டமன்ற உரைகள்
643
செய்தியை எனக்கு முதன்முதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? நாம் அந்த முயற்சியிலே கடந்த காலத்திலே ஈடுபட்டிருந்தோம் என்பதற்காக, ஒரு வெற்றிச் செய்தியாக அதை என்னிடத்திலே சொன்னார். நான் அதை மறுக்கவில்லை. ஆனால், வீரப்பனை நாங்கள் என்னவோ, நண்பராகக் கருதி வைத்திருந்ததைப்போலவும், இங்கே நண்பர்கள் பேசும்போது, அவர் ஏதோ எங்களுடைய கொள்கைப் பரப்புச் செயலாளராக, திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டவராக எல்லாம் இங்கே பேசினார்கள். திருத்தணி தம்பிகூட மிக வேகமாகத் தலையாட்டுகிறார், “ஆமாம் பேசினோம்” என்று. தலையாட்டுவீர்கள். இனிமேல் தலையாட்ட மாட்டீர்கள். ஆனால், நடந்தது என்ன? எப்படி வீரப்பனை நாங்கள் கருதினோம். வீரப்பனை நீங்கள் கருதுவதுபோல, நாங்கள் பெரிய கதாநாயகனாகக் கருதினோமா? அவர்
பிடிக்கப்பட வேண்டியவர். அவரால் ஏற்படுகின்ற
தொல்லைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையை எடுத்தவர்கள்தான் நாங்கள்.
அப்படி ஒரு நிலை எடுத்து, அவரை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரோடு நக்கீரன் கோபாலைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி, பேச்சுவார்த்தை நடத்தி, கடைசியாக வீரப்பன் ஒத்துக்கொண்டான், நான் 2 ஆண்டுக் காலம், 3 ஆண்டுக் காலம் சிறைச்சாலையில் இருக்கத் தயார் என்று சொல்லி, இப்போது சொல்கிறேன் உங்களுக்கு; பலருக்குத் தெரிந்திருக்கும். செங்கற்பட்டு பக்கத்திலே உள்ள, மதுராந்தகத் திற்கு அருகிலே உள்ள மரப்பாளையம் பங்களாவில், கருங்குழி பங்களாவில், அவரைச் சிறை வைப்பது என்றும், வழக்கை நடத்துவது என்றும், அவர்மீது உள்ள கொலை வழக்குகளை யெல்லாம் நடத்துவது என்றும், அந்த வழக்குகளுக்கு அவர் ஆஜராவதற்கு ஏற்றபடி, அந்தச் சிறையிலே அவரை வைத்திருப்பது என்றும், அதற்கு ஒத்துக்கொண்டு அவர் கைதாவது என்றும், ஒரு குறிப்பிட்ட தேதியிலே அவர் வந்து சரணடைவது என்றும், இவ்வளவு ஏற்பாடுகள் நடந்தபிறகு, என்னவாயிற்று? ஒரு போலீஸ் அதிகாரி, வீரப்பனுக்குச் செய்தி அனுப்பினார். 'நீ கருணாநிதியிடத்திலே வந்து சரணடைகிற அன்றைக்குச் சுட்டுக்