மாறுபட்டிருக்கலாம். ஆனால் சிறுகதைக்குரிய இலக்கணத்திலிருந்து இவை மாறுபட்டவை அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
தமிழ்ச்சிறுகதைத் துறையில் திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பு என்ன என்பதை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் முயற்சியே இந்தத் தொகுதிகளின் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.
இவை இப்போது வெளியிடப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலங்களில் அவற்றில் பல புத்தகமாக வெளியிடப்பட்டிருந்தும் கூட, ‘அரசியல்’ காரணமாக அவை அரசுசார்ந்த நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றில் இடம் பெறவில்லை; இடம் பெறும் முயற்சியையே சிலர் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்.
பின்னாளில் தமிழ்ச் சிறுகதைகளில் திராவிட இயக்கத்தின் பங்குபற்றி ஆய்வு செய்ய விரும்புவோருக்கு இவை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் இவை இப்போது புதிதாக வெளியிடப்படுகின்றன.
இவர்கள் எழுதிய கதைகள் அனைத்தும் தொகுதிகளாக நூலாக்கப்படுவதே முறை. ஆயினும், இன்றைய நிலையில் காகிதம்,அச்சுக் கூலி போன்றவற்றின் விலை உயர்வை மனத்தில் கொண்டு, சாதாரண வாசகரும் வாங்கமுடிகிற விலையில் தரவேண்டும் என்பதற்காக எழுத்தாளர்களின் குறிப்பிட்ட சிலகதைகள் மட்டுமே இங்கே தரப்படுகின்றன.திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக உருமாறியதில் தமிழரின் புறவாழ்வுக்குப் பல நன்மைகள் கிடைத்திருப்பினும், தமிழ்இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் அது நட்டக் கணக்கே ஆகும்.
அவர்களின் சிறுகதைப் பணி அரசியல்பணி காரணமாக தொடரமுடியாத சூழலை ஏற்படுத்திவிட்டது என்பதை நாம் சொல்லியே
VII