உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சிறுகதைகள்


கிறார்கள். யார், எங்கே, எப்பொழுது தவம் செய்கிறார்கள் என்று அலைந்து திரிந்து கண்டுபிடித்து அவர்களது தவத்தைக் கெடுப்பதற்காகவே தேவலோகத்தில் ஒரு பெண்கள்படை தயாராக இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்கள் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோர், தவமிருப்பவர்களை அவர்கள் தான் போய்க்கெடுப்பார்களோ, அல்லது அவர்கள் தங்களைக் கெடுக்க வரட்டும் என்று எதிர்பார்த்து இவர்சுள் தான் தவம் செய்வார்களோ—இரண்டும் ஆராய்வதற்குரிய விஷயங்கள்தாம்!

ஏதேதோ வந்து விழுந்து கொண்டிருந்த என் வயிற்றில் நேற்று ஒரு பழைய புராணம் வந்து விழுந்தது. புத்தக உருவில் அது இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில ஏடுகள். பாதிக்கு மேல் செல்லரித்து விட்டிருந்தது. அதில்தான் தவத்தைப் பற்றிய விளக்கங்களையும் கதைகளையும் படித்துத் தெரிந்து கொண்டேன். விசுவாமித்திரர் தவத்தைக் கெடுக்க வந்த மேனகையின் சாகசங்களையும், அவளது வலையில் முனிவர் விழுந்த பிறகு, அவள் புரிந்த சரசங்களையும், கானகத்து அருவியோரங்களில் அவர்கள் நடத்திய காதல்கேளிக்கைகளையும், கடவுளை நினைக்கும் தவக்கூடம் காமவேள் நடனசாலையாகக் காட்சியளித்ததையும், மகேஸ்வரன் வருவதற்கு முன்பு மலர்மாறன் வருகை தந்து மாமுனிவரை மங்கையின் மடியிலும் காலடியிலும் உருட்டி உருட்டி மகிழ்ந்தயையும், ஜெபமாலை இருந்த கையில் மேனகையின் துடியிடை சிக்கித் தவித்ததையும். மறைகற்ற முனிவரின் தடித்த உதடுகள் மேனகையின் மெல்லிதழ்த் தேன் பருகிடத் துடித்த விந்தையையும் வெகு சுவையுடன் நான் படித்துக்கொண்டிருக்கும் போது தானா அந்த குப்பை வண்டிக்காரன் வந்து தொலைய வேண்டும்!