உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

17


மகாராஜா. நான் கண்களை இறுக மூடிக்கொண்டு காதை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டிருந்தேன்.

“கண்ணு!”

“என் மூக்கு!”

“அய்யோ என் மன்மத ராஜா!”

இப்படிச் சில கொஞ்சுதல் வார்த்தைகள் கரகரத்த தொண்டையிலிருந்து வெளிப்பட்டன. அந்தப் பாவி மகாராஜனுக்கு நான் ஒருவன் -அவனுடைய நண்பன்- இருக்கிறேனே என்ற நாணம்கூடக் கிடையாது. சிறிது நேரம் கழித்துக் கண்ணை விழித்துப் பார்த்தேன். என் நண்பன் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தான். மன்னிக்கவும். ‘இந்நாட்டு மன்னர்’ துயில் கொண்டிருந்தார். மகாராணியைக் காணவில்லை. அவள் அடுத்த ராஜ்யத்துக்குப் போயிருக்கக் கூடும். மறுநாள் காலையில் இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். தொலைவில் பேசிக்கொண்டிருந்ததால் எதுவும் புரிகிற அளவுக்குக் காதில் விழவில்லை. பிறகு, என் நண்பன் என்னருகே வந்து, “போலீசாரைக் கண்டு பயப்படாதே! அவர்கள் என்னைக் கைது செய்ய வந்ததாக நினைக்காதே! வெளிநாட்டிலேயிருந்து யாரோ பெரிய மந்திரி வருகிறாராம்; அவரைப் பார்க்க இந்த ராஜாவை அழைக்கிறார்கள்” என்றான்.

நான் வியப்புடன், “அப்படியா? அந்த மந்திரியை எங்கே போய்ச் சந்திப்பாய்?” என்று கேட்டேன்.

“நான் போய் எனது வழக்கமான ஜெயில் மாளிகையில் இருப்பேன், அவர் வந்து என்னைச் சந்திப்பார். நீ