உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. கலைஞர்

19


இருக்கிறது. பச்சைக் குழந்தை! இப்போதுதான் பிறந்திருக்கிறது. அடடா! அதன் கழுத்தெல்லாம் ரத்தம்! குழந்தைத் தூங்குகிறதா? இல்லை; செத்துவிட்டது!

கழுத்து முறிக்கப்பட்டிருக்கிறது. சரிதான்; அவள்தான் குழந்தையின் தாய்! குழந்தையை என் வயிற்றுக்குள் போடப் போகிறாள்; போட்டே விட்டாள். அவள் ஓடுகிறாள். என்னைப் போலீஸ் வரையிலே மாட்டிவிட்டு அவள் ஓடுகிறாள். ஏன் ஓடுகிறாள்? புரிகிறது, புரிகிறது! அவள் கழுத்தில் தாலியைக் காணோம்!