26
சிறுகதைகள்
அமைதி. புதிய பிணம் எரிய ஆரம்பித்தது. அதன் சொந்தக்காரர்கள் பிரிந்து விட்டார்கள். இனி அது நெருப்புக்கோ, அல்லது ஆற்றில் தெரியும் வாளை மீனுக்கோ சொந்தம்.
காலையில், சொந்தக்காரர்கள் உயிரோடிருந்தால் எலும்பு அள்ளிக் கொட்ட அங்கே வருவார்கள். அதற்குள் ஆறு அந்த வேலையைச் செய்தாலும் செய்துவிடும். பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஓட்டப் பயணத்தைத் தொடர்ந்தான் பக்தன். எதிரே சில தீவட்டிகள். பாடையல்ல; நீண்ட கழியில் சுரு துணி ஏணை! அதிலே ஒரு குழந்தை. விழிக்காத நித்திரை. கொள்ளிச்சட்டி கிடையாது. மண்வெட்டிகள் தூக்கி வந்தார்கள் சிலர். புதைக்கும் பிணம் போலும்! பக்தன் முன்னிலும் பன்மடங்கு வேகமாக ஓட ஆரம்பித்தான். காலிலே கருவேல முட்கள் தைத்துக்கொண்டன. அதையும் அவன் கவனிக்கவில்லை. கரையோரமுள்ள தாழை மடல்களிலே அவன் முகம் உராய்ந்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. பழனிக்குப் பால்காவடி எடுப்பவனின் உடலிலே காணப்படும் அலகுகள் போல-சிலாகைகள் போல- அவன் உடலெங்கும் முட்கள் நீட்டிக்கொண்டிருந்தன. எதிரேயுள்ள பாழுங்கிணற்றை எப்படித்தான் தாண்டினானோ தெரியாது. பார்ப்பதற்கே பயங்கரத் தோற்றமளிக்கும் பாவாடைராயன், காத்தவராயன் கோயில்களை எப்படித்தான் கடந்தானோ அவனுக்கே தெரியாது! ஊர்க் கோடிக்கு வந்து சேர்ந்தான். அதோ... ஒரு கோயில் சுற்றிலும் காடு. உள்ளே அந்த ஆலயம்! ‘அம்மா!’தாயே! எனக் கத்தினான். ஆவேசம் வந்தது போல் ஓடினான். கதவு பூட்டியிருந்தது, மதிற்சுவரின் மீது தாவினான். அடுத்த பக்கம் குதித்தான். எதிரே காளிகா தேவியின் உக்கிரமான உருவம். உறுமும் சிங்கம்-உதிரம் கொட்டும் தலை-எல்லாம் சிலை வடிவில்தான்! அதனால் பக்தன்