உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

35


பிரயாணிகள் கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பாக்கியம் கிடைக்காத பலர் கண்ணுக்குள் நுழைந்து இமைகளைப் பிடித்திழுத்து மூடும் உறக்கத்தை எதிர்க்கத் துணிவற்று ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தனர். கழுத்தில் நிற்கச் சக்தியிழந்து தொங்கும் தலையை முழங்காலிலோ, பக்கத்திலிருப்பவர் தோள் பட்டையிலோ, அல்லது ஜன்னல் கட்டையிலோ முட்டுக் கொடுத்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த காட்சி பரிதாபமாக இருந்தது.

இந்தக் ‘கும்பகர்ண லோக’த்தில் கொட்டை கொட்டையாக விழித்துக் கொண்டிருந்தவர்களும் இல்லாமலில்லை. நூற்றுக்கு ஒருவராவது இருக்கத்தான் செய்தனர். வண்டியில் ஆறாவது பெட்டியில் ஜன்னல் வழியாகக்கூட கால்களை வெளியே சிறிது நீட்டிக் கொண்டு கஷ்டப்பட்டுப் பலர் கொறட்டை விட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட ஒரு பலகையின் மூலையில் உட்கார்ந்திருந்த ஒருவன், அலுப்பைப்பற்றிய அக்கறை எதுவுமில்லாமல் ஏதோ ஒரு உணர்ச்சியில் அங்மிங்கும் பார்ப்பதும், பலகைக்குக் கீழே கவனிப்பதுமாயிருந்தான். அவனுக்கு எதிரில் மற்றொரு பலகையில் மற்றொரு வாலிபன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் விழிகள் மூடியிருந்தனவே தவிர அவன் தூங்கவில்லையென்பது தெரிவாயிற்று. விழிகளும் முக்கால் பாகந்தர்ன் அடைபட்டிருந்தன. கால்பாகத்தின் வழியாக அவன் பார்வை எதிரில் உட்கார்ந்திருக்கும் வாலிபனையும், பலகைக்குக் கீழே படுத்திருக்கும் ஒரு பெண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன.

அவனும் சந்திராவும் அவர்கள் குழந்தையுடன் சென்னையில்தான் ஏறினார்கள். அவர்கள் ஏறி உட்கார்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் எதிர்ப் பக்கத்தில்