உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

43



“அதான் ஒரு தடவை சொன்னீங்களே சார்! ஒரிஜினலில் உள்ளபடியே கம்போஸ் பண்றேன் சார்.”

“உனக்குத்தான் மறதி ஜாஸ்தியாச்சே! உம், போ, ஒரிஜினலில் உள்ளபடி போடு”

கம்பாசிட்டர் கந்தசாமி வேதாந்தி பிரஸ் மானேஜர் வேலாயுதம் பிள்ளையிடம் தான் அச்சுக் கோத்த ஒரு ‘நோட்டீஸ்’ மாதிரித் தாளைக் காட்டியபோது நடந்த உரையாடல் மேலே காண்பது.

கந்தசாமி மானேஜரால் குற்றம் சொல்லப்பட்ட மாதிரித்தாளைக் கிழித்தெறிந்து விட்டு, ஒரிஜினலை எடுத்து ஒரு முறை படித்தான்.

மணி மணியான எழுத்துக்கள், கந்தசாமியின் முகத்திலே ஒரு பரிதாபம் பிரதிபலித்தது.

‘திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்’ விளம்பரத்தின் தலைப்பு இது. நிகழ்ச்சி நிரல் என்ற பகுதியில் ‘ஸ்ரீஜகத் யோகானந்த சுவாமிகள் பாஞ்சாலி சுயம்வரம் என்பது பற்றி உபன்யாசிப்பார்கள்,’ என்ற குறிப்பு இருந்தது. கந்தசாமி உதடுகளைக் கடித்துக் கொண்டான். ஒரு ஏளனம் பிதுங்கும் குட்டிச் சிரிப்பும் அதைத் தொடர்ந்து ஓர் ஆபாசமான பெருமூச்சும் வெளிக் கிளம்பிற்று.

“நானும் இந்தப் பிரசுக்கு வந்து ஐந்து வருஷமாயிற்று. இந்த ஆபாசம் பிடித்த புராணக் குப்பைக்கு அச்சுக் கோப்பதைவிட தூக்கு மாட்டிக் கொள்வது எவ்வளவோ மேல்! அட தமிழ் எழுத்துக்களே! மலர்களை மாகாளிக்கு காவு கொடுக்கும் ஆட்டுக் குட்டிக்குப் போடும்