உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

47



அச்சு இயந்திரத்தில் இரும்புச் சட்டம் ஏறிற்று. ஒன்று... இரண்டு...... மூன்று...... நூறு..... ஆயிரம்...... பத்தாயிரம்...... ‘நோட்டீஸ்’கள் அடித்து முடிந்தன. கந்தசாமியே அதை எடுத்துக் கட்டிக் கொடுத்தான். வேலைக்கார ரத்தினம் விளம்பரச் சுமையோடு நடையைக் கட்டினான். செட்டியார் உத்தரவுப்படி. பத்தாயிரம் ‘நோட்டீசை’யும் ஊரெங்கும் பரப்பிவிட்டுத் தான் உட்கார்ந்தது அந்த அடிமை.

மறுநாள் கும்பாபிஷேகம். தாங்கமுடியாத கூட்டம். செட்டியார் சர்வாலங்கார பூஷிதராய் தம் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினார். மற்றொரு காரில் ஒரு மங்கையர் கூட்டம் வந்து இறங்கிற்று. கூட்டத்தை ஒருமுறை பார்த்தார். ‘எல்லாம் என் பெருமை’ என்று அவருடைய நிமிர்ந்த தலை சொல்லிற்று. ஓர் அலட்சியமான புன்னகை-வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டது... அகம்பாவம் தெறிக்கும் கண்கள் அகலமாகிக் கொண்டன.

கூட்டம் அவரைப் பார்த்துவிட்டது.

ஒரே ஆரவாரம்!...

“ஏய் காமநாதன் செட்டியார்... காமநாதன் செட்டியார்”... இப்படி ஒரு பேரிரைச்சல் கிளம்பி விட்டது. அநாவசியமான கைத்தட்டல். ஒரே நையாண்டி சிரிப்பு! இடையே, “காமநாதன் செட்டியாரே! போகாநந்த சுவாமிகள் எங்கே? என்ற கேள்விகள்! “பொருத்தமான” பெயர்களப்பா... காமநாதன்- போகாநந்தர்.. இப்படி ஒரு விமர்சனம். மீண்டும் கைத்தட்டலும் சிரிப்பும். “கண்ட பெண்களைக் கற்பழிக்கும் காமநாதன் செட்டியாருக்கு” என்ற ஒற்றைக்குரல். இதைத் தொடர்ந்து ‘ஜே ஜே’ கோஷம். இதற்குள் ஒன்றும் புரியாத சிறுவர்கள் ‘திரு திரு’வென விழிக்கும் செட்டியாரைப் பணக்காரப்