உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

53


அறிவு வளர்ச்சி பெற்றவளுமல்ல. போட்டி போட்டுக்கொண்டு புராணக் குட்டையிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவளும் ஒருத்திதான். ஆயினும் அவள் தீபாவளி கொண்டாடவில்லை!

காதைத் தொட முயலும் கண்களும், காண்பவரைக் கவரும் விதத்திலே அமைந்த உடற்கட்டும் பெற்ற நாராயணி, தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழாவில் கலந்து மகிழும் ஊரைப்பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

வீதியிலே கிருஷ்ணன்-சத்யபாமா விக்ரகம் அலங்கரிக்கப்பட்ட அழகான ரதம் பவனி வந்துகொண்டிருந்தது. ‘வீரன்’ கிருஷ்ணன் நரகாசூரனிடம் தோற்று மயங்கும் வேளையிலே, தனது கணைகள் கொண்டு அசுரனை அழித்தாள் பாமா என்பதுதானே புராணம். சங்கு சக்ராயுத பாணியான விஷ்ணுவின் அம்சம் பரமாத்மாவே வீழ்ந்து விட்டபோது, அவரின் தேவி அசுர சிங்கத்தின் உயிரை அணைத்துவிட்டாள் என்றால் ஆச்சரியமாகத்தானிருக்கும். எக்கணை வீசினாளோ, என்ன வக்கணை பேசினாளோ! எப்படியோ தேவியின் தியாகத்தால் தேவர்களின் எதிரி ஒழிந்தான் என்று திருப்தி கொண்டனர் பக்தர்.

அந்தப் பக்தகோடிகள் பரந்தாமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடி, அவனையும் அவன் பிராட்டி பாமாவையும் ரதத்திலே வைத்து தெருச் சுற்றினர். வெற்றியின் சூட்சுமம் தெரியாத விளையாட்டுப் பிள்ளைகளும் பரமாத்மாவுக்கு ‘ஜே’ போட்டனர். ஊர்ப் பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். நாயன வித்வான்கள் தங்கள் திறமையைப் பொழிந்தனர். வீடெங்குமுள்ள